ஐசிசி டி20 உலகக்கோப்பை: இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதன் மூலம் பாகிஸ்தானிடம் தோல்வியுற்ற இந்தியா விழித்தெழ இதுவே சரியான தருணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-099

 டெல்லி: துபாயில்  நடைபெற்ற நடப்பு டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் முதல் போட்டியில் இந்தியா களமிறங்கியது. இதுவரை டி20 வரலாற்றில் பாகிஸ்தானிடம் தோல்வியே சந்திக்காத இந்தியா முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பாகிஸ்தான் அணியில் ஷாகின் ஷான் அப்ரடியிடம் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோகித் ஷர்மா கே எல் ராகுல் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து முதல் மூன்று ஓவரிலேயே 3 விக்கெட்டை இழந்தது.

விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் தவிர மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும் பந்துவீச்சிலும் பாகிஸ்தான் அணியின் விக்கெட் எடுக்க இந்திய வீரர்கள் தடுமாறினர். இதனால் மூன்னாள் சழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தொடக்க  ஆட்டக்காரராக இஷான் கிஷான் பொருத்தமாக இருப்பார் என்றும் சிறப்பாக விளையாடுவார் என்றும் தனது கருத்தை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இஷான் கிஷானின் கூடுதல் சிறப்பே இடது கை பழக்கத்தினால் இடது கை பவுலிங்கை இவர் லாவகமாக கையாழ்வது தான். முதலில் ரோகித் ஷர்மா- இஷான் கிஷான் ஜோடி தொடர்ந்து 3வது வீரராக விராட் கோலி 4வது வீரராக கே எல் ராகுல் 5வது வீரராக  சூர்யகுமார் யாதவ் 6 வது வீரராக ரிஷப் பந்த் 7வது வீரராக ஜடேஜா  8 வது வீரராக ஷர்துல் தாகூர், தொடர்ந்து பூம்ரா,வருண், ஷமி என அடுத்தடுத்து களமிறக்கலாம் என்றும் தனது கருத்தை ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் வலது தோல்பட்டை வலியின் காரணமாக  ஹர்திக் பாண்டியா 11 வது வீரராக களமிறக்கலாம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுடனான தோல்வியை ஏற்க சற்று கடினமானதாக இருந்தாலும் இனி வரும் நியூசிலாந்து, ஸ்காட்லாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுடனான போட்டிகளில்  சிறப்பாக விளையாடி அரை இறுதி சுற்றில் வலுவான அணியாக வலம் வர முடியும் என்று தனது உரையை முடித்துள்ளார்.

வரும் அக்டோபர் 31ம் தேதி இந்தியா- நியூசிலாந்த் அணிகள் மோதவுள்ளன. இதில் நியூசிலாந்த் அணியை வெற்றி கண்டால் மட்டுமே தரவரிசை பட்டியலில் முன்னேறி அரைஇறுதி சுற்றிக்கு இந்தியா முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "ஐசிசி டி20 உலகக்கோப்பை: இஷான் கிஷான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதன் மூலம் பாகிஸ்தானிடம் தோல்வியுற்ற இந்தியா விழித்தெழ இதுவே சரியான தருணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.