ஐசிசி டம்மியாகிடுச்சு, இப்போ ஐபிஎல்தான் டான்: அப்ரிடி விமர்சனம்!

Surprising To See CSA Allowing Players To Travel For IPL In The Middle Of A Series Shahid Afridi
Surprising To See CSA Allowing Players To Travel For IPL In The Middle Of A Series Shahid Afridi

ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், இரண்டாவது போட்டியில் பங்கேற்ற
தென்னாப்பிரிக்க வீரர்கள் காகிசோ ரபடா, குவின்டன் டி காக், அன்ரிக் நோர்க்கியா, டேவிட் மில்லர், லுங்கி நெகிடி ஆகியோர் மூன்றாவது போட்டியில் பங்கேற்காமல், ஏப்ரல் 9ஆம் தேதி (நாளை) துவங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தென்னிராப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியுடன் இந்தியா வந்தடைந்தனர். இதைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தான் அணியைவிட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் முக்கியமானதா என்ற ரீதியில் விமர்சித்துள்ளார்.

இதனால், கடைசி போட்டியில் தென்னாபிரிக்க அணி பலம் இழந்து காணப்பட்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 320/7 ரன்கள் குவித்தது. ஃபக்கர் ஜமான் 101 ரன்களும், இமாம் உல் ஹக் 57 ரன்களும் எடுத்து ஸ்கோரை உயர்த்தினர்.

அடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் துவக்க வீரர் ஜனிமன் மாலன் (70), கெய்ல் வெர்ரின் (62) ஆகியோர் அரை சதம் கடந்தும் அணி வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இறுதியில் 49.3 ஓவர்கள் முடிவில் 292/10 ரன்கள் மட்டும் சேர்த்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டி முடிந்தப் பிறகு ட்வீட் வெளியிட்ட பாகிஸ்தான் அணி முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி, “பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிய தென்னாப்பிரிக்கா வீரர்களை, தொடரின் நடுப்பகுதியில் ஐபிஎல் விளையாட அனுப்பி வைத்தது ஆச்சரியமாக உள்ளது. டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர்களைப் பாதிப்பதைப் பார்க்கும்போது கவலையாக உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனப் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல, இதை மறுஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Be the first to comment on "ஐசிசி டம்மியாகிடுச்சு, இப்போ ஐபிஎல்தான் டான்: அப்ரிடி விமர்சனம்!"

Leave a comment

Your email address will not be published.


*