ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருது: ஷஃபாலி வர்மா, ராணா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

www.indcricketnews.com-indian-cricket-news-109

ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. மகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளனர்.

மாதத்தின் சிறந்த வீரா்/வீராங்கனை என்கிற பெயரில் புதிய விருதை அறிமுகம் செய்துள்ளது ஐசிசி ஆணையம். சா்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வீரா், வீராங்கனைகளை ஆண்டு முழுவதுமாக அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என ஐசிசி அறிவித்துள்ளது. தங்களுக்கு விருப்பமான வீரா், வீராங்கனைகளுக்கு அந்த விருது கிடைக்கச் செய்யும் வகையில் ரசிகா்கள் ஆன்லைன் மூலமாக வாக்குகளை பதிவிடலாம். முன்னாள் வீரா்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளா்கள் ஆகியோா் அடங்கிய ஐசிசியின் வாக்கு செலுத்துதல் அகாதெமியும், ரசிகா்களுடன் இதில் இணைந்து செயல்படுகிறார்கள். விருதுக்கு தகுதியான நபா்கள், களத்தில் செயல்பட்டது, சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் வெளிப்படுத்திய ஆட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐசிசியின் விருதுகள் பரிந்துரை குழுவால் நிர்ணயிக்கப்படுகிறது என ஐசிசி ஆணையம் அறிவித்துள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கான விருதுகளை இந்திய வீரர்களே பெற்றிருக்கிறார்கள். ஜனவரி மாதத்தின் சிறந்த வீரராக ரிஷப் பந்த், பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின், மார்ச் மாதத்தின் சிறந்த வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இது இந்திய அணிக்கு மிகவும் பெருமைக்குறியதாக கருதப்படுகிறது. இந்நிலையில் ஜூன் மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டது. மகளிர் பிரிவில் ஷஃபாலி வர்மா, ஸ்னேஹ் ராணா ஆகிய இரு இந்திய வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளனர். மூன்றாவதாக இங்கிலாந்தின் சோஃபியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிஸ்டால் டெஸ்டில் சிறந்த வீராங்கனையாக ஷஃபாலி தேர்வாகியுள்ளார். இதில் 17 வயது இளம் வீராங்கனையான ஷஃபாலி வர்மா மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய சாதனையை நிகழ்த்துயுள்ளார் மேலும் இந்திலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் முதல் டெஸ்டில் 96 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. அறிமுக டெஸ்டின் இரு இன்னிங்ஸிலும் அரை சதமெடுத்துள்ளார். ஆண்கள் பிரிவில் நியூசிலாந்தின் கான்வே, ஜேமிசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டி காக் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக இந்திய அணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது அனைத்து ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாகியது மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment on "ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருது: ஷஃபாலி வர்மா, ராணா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது"

Leave a comment

Your email address will not be published.


*