என்னை பொறுத்தவரையில் ப்ளான் – பி எப்போதும் கிடையாது : கபில் தேவ்!

விளையாட்டை பொறுத்தவரையில் ப்ளான் – பி என்பது எப்போதுமே கிடையாது என்றும்  தான் தினமும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றும்  முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 1983இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த முதல் கேப்டன் கபில் தேவ். இந்நிலையில் இவர் தன்னைப் பொறுத்தவரையில் ப்ளான் – பி என்பதே இல்லை என்றும் அது அவர்களை பலவீனப்படுத்திவிடும் என்றும், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கபில் தேவ் கூறுகையில், “கடலில் நீங்கள் மூழ்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், அங்கு நீங்கள் ப்ளான் – பி திட்டமிடுவீர்களா? தப்பிப்பது மட்டும் தான் ஒரே ஒரு திட்டமாக இருக்கும். பல ஆப்ஷன்களை நீங்கள் வழங்கிக்கொண்டால் அது உங்களை பலவீனப்படுத்திவிடும். கடந்த 1983 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் கூட ப்ளான் – பி என எதையும் சிந்திக்கவில்லை. ஒரே ஒரு திட்டம் வெற்றி பெறுவது கொண்டாடுவது. அதிகமாக ரசித்து விளையாடும் போது மேலும் சிறப்பாக செயல்பட முடிந்தது.

நான் கிரிக்கெட் விளையாட துவங்கிய காலத்தில் ஒரு சீனியர் வீரர் என்னிடம் வந்து, நீ வெற்றிகரமாக திகழ வேண்டும் என்றால் தூக்கத்திலும் கூட காது, கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும் என ஆங்கிலத்தில் சொன்னால். ஆனால் அதற்கான அர்த்தம் எனக்கு புரியவில்லை. ஏன் என்றால் ஆங்கிலத்தின் அர்த்தங்களை சரியாக புரிந்து கொள்ளும் பின்னணியில் இருந்து நான் வரவில்லை.

அதனால் யார் இவர் எதோ முட்டாள்தனமாக பேசுகிறார் என நினைத்துக்கொண்டேன். மேலும் தூங்கும் போது எப்படி ஒரு மனிதனால் தனது காது, கண்களை திறந்து வைத்துக்கொள்ள முடியும் என்றும் நினைத்தேன். அதன் பின் அவர் என்னிடம் வந்து, நான் சொன்னதை அப்படியே எடுத்துக்கொள்ளாதே, அதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு செயல்படு என்றார். அன்று தான், யாராவது ஆங்கிலத்தில் எதாவது சொன்னால் அதற்கு அர்த்தம் வேறு ஒன்றாக இருக்கும் என்பதை கற்றுக்கொண்டேன்.

அந்த சம்பவம் தான் என் வாழ்க்கையே மாற்றியது. அவர் மேலும் ஒரு நாள் நீ கேப்டனாவாய் அதனால் இப்போதே கற்றுக்கொள் என்றும் தெரிவித்தார். அதனால் நான் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவேன். எந்த ஒரு நபரும் எனக்கு எல்லாம் தெரியும் என சொல்ல முடியாது. அதனால் ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக்கொள்ளுங்கள்.  எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும் யாரும் இல்லை. நான் அதைத்தான் செய்தேன்” என்றார்.

Be the first to comment on "என்னை பொறுத்தவரையில் ப்ளான் – பி எப்போதும் கிடையாது : கபில் தேவ்!"

Leave a comment

Your email address will not be published.