என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்: அடுத்த பெரிய இலக்குக்கு ஹர்திக் பாண்டியா தயார்.

www.indcricketnews.com-indian-cricket-news-100113

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது .அதுமட்டுமின்றி தனது அறிமுக சீசனிலேயே ஐபிஎல் கோப்பை வென்ற பெருமையை ராஜஸ்தான் அணிக்கு அடுத்ததாக, குஜராத் டைட்டனஸ் அணி தட்டிச்சென்றது.

மேலும் குஜராத் அணிக்கு முதுகெலும்பாக திகழும் ஹர்திக் பாண்டியா, கடந்த அக்டோபர் 2019-ல் முதுகில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஒன்றரை ஆண்டுகளாக பந்துவீச்சிலிருந்து விலகியிருந்து ,இந்தாண்டு அட்டகாசமான கம்பேக் கொடுத்துள்ளார். இறுதிப்போட்டியில் ஜாஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மையர் ஆகியோரின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

அதிலும் பேட்டிங்கில் 15 இன்னிங்ஸ் விளையாடி 487 ரன்களையும், பந்துவீச்சில் 8 முக்கிய விக்கெட்களையும் சாய்த்து அசத்தியுள்ள இவர், கேப்டனாக தனது அணிக்கு ஐபிஎல் தொடரில் முதல்கோப்பையை வென்று சாதனையும் படைத்துள்ளார். 

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஹர்திக் பாண்டியா,” ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டால்,வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த போட்டி சிறப்பான போட்டியாக எங்களுக்கு அமைந்தது. ஒரு கேப்டனாக முதல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது மகிழ்ச்சி. இந்த கோப்பையுடன் சேர்த்து 5 முறை இறுதிபோட்டியில் வெற்றி பெற்றிருக்கிறேன் என்பது சிறப்பான ஒன்று. இனிவரும் பயணத்திற்கு இந்த வெற்றி ஒரு துவக்கமாக அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அடுத்த சவால் குறித்து சில முக்கிய தகவல்களை பகிர்ந்துகொண்ட ஹர்திக் பாண்டியா,அதுகுறித்து கூறுகையில், “எனது அடுத்த இலக்கு பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும். அது இந்திய அணிக்காக உலகக்கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்பது தான். என்ன நடந்தாலும் சரி, அதைப்பற்றி கவலையில்லை. உலகக்கோப்பையை வென்றுக்கொடுக்க நான் என்னவெல்லாம் பங்களிப்பு செய்யவேண்டுமோ அத்தனை பங்களிப்பையும் செய்வேன் ” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை இலக்கு என்பது சுலபமானதுதான். என் அணி உச்சம் தொடவேண்டும். இதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எத்தனை போட்டிகள் எத்தனை நாட்கள் விளையாடுகிறோம் என்பது முக்கியமல்ல இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்பது கனவு அது நினைவாகியுள்ளது. எனக்கு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது என்பது எப்போதும் மகிழ்ச்சியளிப்பதே. இந்த வெற்றி மூலம் இப்போது எனக்கு கிடைக்கும் அன்பும் ஆதரவும் இந்திய அணி மூலமே எனக்குக் கிட்டியது. இனி இந்தியாவுக்காக உலகக்கோப்பையை வென்று தருவதுதான் என் லட்சியம். இதுகுறித்து மட்டுமே என் மூளையில் தற்போதைக்கு ஓடிக்கொண்டே இருக்கிறது. அதற்கு தயாராவேன்” இவ்வாறு ஹர்திக் பாண்டியா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அயர்லாந்து டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படவுள்ளார் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment on "என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்: அடுத்த பெரிய இலக்குக்கு ஹர்திக் பாண்டியா தயார்."

Leave a comment

Your email address will not be published.


*