என்கிட்ட திறமை இல்லையா? அணியில சேத்துக்கவே மாட்றாங்க: குல்தீப் உருக்கம்!

26 வயதாகும் குல்தீப் யாவதிற்கு கடந்த இரண்டு வருடங்களாகவே இந்திய அணியில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணிக்காகக் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விளையாடிய இவருக்கு தற்போதுதான், கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.

அப்போட்டியில் குல்தீப் சரியாக அழுத்தங்களுடன் பந்துவீசினார். ரன்கள் அதிகளவில் கசிந்த நேரங்களில் நம்பிக்கையற்றவராகக் காட்சியளித்தார். இதனால், குல்தீப்பிறகு கிரிக்கெட் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பலர் கூறத் துவங்கினர்.

இந்நிலையில், ஐபிஎல் 14ஆவது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவிற்கு ஒரு போட்டியில் கூட களமிறங்க வாய்ப்பு கொடுக்கவில்லை. ஐபிஎல் 14ஆவது சீசனில் எனக்கு XI அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது அதிர்ச்சியளித்தது என குல்தீப் யாதவ் பேசியுள்ளார்.சென்னை மைனாதாம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம். இதில்கூட குல்தீப்பிற்கு கொல்கத்தா அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்கவில்லை. இதுகுறித்து தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள குல்தீப் யாதவ், உருக்கமான சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“ஒரு வீரர் தொடர்ந்து XI அணியில் இடம்பெற்றால், அவருக்கு மனவுறுதி அதிகரிக்கும். எவ்வித தயக்கமும் இல்லாமல் சிறப்பாக விளையாட முடியும். இதே பல போட்டிகளில் வாய்ப்பு வழங்காமல், திடீரென்று களமிறக்கப்பட்டால், அவரால் நெருக்கடியுடன் தான் விளையாட முடியும். கிடைத்த அந்த ஒரு போட்டியில் தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டும் என எண்ணத்தில்தான் விளையாடுவோம். இதே மனநிலையில்தான் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினேன். என்னால் அழுத்தங்கள் இன்றி பந்துவீச முடியவில்லை. கடந்த வருடம் முழுவதும் எனக்குக் கெட்ட நேரம்தான்” எனத் தெரிவித்தார்.

“ஐபிஎல் 14ஆவது சீசனில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த நான் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. எனக்குத் திறமை இல்லையோ? என பல நேரங்களில் நினைத்தது உண்டு. சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானம். அதில்கூட எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இது எனக்கு அதிர்ச்சியளித்தது” எனக் கூறினார். குல்தீப் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி 26 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 63 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 105 விக்கெட்களையும், 20 டி20 போட்டிகளில் 39 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், அவர் 29 விக்கெட்டுகளைச் சேர்த்தார். இருப்பினும், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், அவர் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Be the first to comment on "என்கிட்ட திறமை இல்லையா? அணியில சேத்துக்கவே மாட்றாங்க: குல்தீப் உருக்கம்!"

Leave a comment

Your email address will not be published.


*