எனது செயல் திறனால் மகிழ்ச்சியில்லை , 40 மற்றும் 50 எல்லாம் ஒன்றும் இல்லை எனக் கூறி இந்திய தொடக்க ஆட்டக்காரர் மறுபிரவேசம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-042

நியூ டெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்று காரணமாக, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2021-22 ரஞ்சி டிராபி போட்டிகள் இரண்டு கட்டங்களாக கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது .  இப்போட்டி இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதொரு முன்னறிவிப்பு.

புகழ்பெற்ற இந்த போட்டியின் மூலம்,இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கென ஒரு அடையாளத்தையும் பெயரையும் உருவாக்குவது மட்டுமின்றி, இந்தியாவின் சில நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு அணியில் விளையாடி  ஃபார்மை மீண்டும் பெறவும் இது சரியான வாய்ப்பாகும்.

மேலும் ரஞ்சி டிராபியில் ,இந்தியாவின் நட்சத்திர மிடில்-ஆர்டர் ஜோடிகளான சேதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் முறையே சவுராஷ்டிரா மற்றும் மும்பை அணிக்காக விளையாடி வருகின்றனர். இதில் ரஹானே மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு டக் அவுட்களை உருவாக்கியுள்ளார்.

அதேபோல புஜாரா 8, 28 மற்றும் 64 ரன்கள் எடுத்துள்ளார். இது போன்ற ஸ்கோர் அவர்களுக்கு எந்த வகையிலும் நன்மை செய்யாது என்றாலும், இன்னும் சில போட்டிகள் மீதமுள்ளன.  புஜாரா மற்றும் ரஹானேவைத் தவிர, தேசிய அணியில் மீண்டும் நுழைவதாகக் கேள்விப்பட்ட மற்றொரு இந்திய நட்சத்திரம் பிரித்வி ஷா ஆவார். இந்த இளம் வீரர் 9, 44 மற்றும் 53 ரன்கள் என தான் செய்து வரும் முன்னேற்றத்தில் மகிழ்ச்சியாக இருந்தாலும், அணியில் திரும்புவதற்கான வாய்ப்பைப் பெற  இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஷாவுக்குத் தெரியும்.

மேலும் இதுகுறித்து ஷா கூறுகையில், “எனது செயல்திறனால் உண்மையில் மகிழ்ச்சி இல்லை, இன்னும் சிறப்பாக இருந்திருக்க வேண்டும். கிரிக்கெட்டில் 40 ,50 எல்லாம் பெரிய ஸ்கோர் இல்லை என்று நன்றாகத் தெரியும்.ஆனால் நான் பரவாயில்லை என்று உணர்கிறேன். ஏனெனில் நான் ரஞ்சி டிராபியில் மும்பைக்காக நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன்,” என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடவிருக்கும் ஷா ,ஜபிஎல் குறித்து கூறுகையில், “நிச்சயமாக, இது ஒரு நீண்ட இடைவெளி. அடுத்த இரண்டரை மாதங்கள், பலரின் கவனம் ஐபிஎல் மீதுதான் இருக்கும். ஆனால் ஐபிஎல் முடிந்ததும் ரெட்-பால் முறையில் மீண்டும் எப்படி மாறுகிறோம் என்பது முக்கிய விஷயமாக இருக்கும்.

ஏனெனில் லீக் ஆட்டத்தைப் போலவே அந்த குறுகிய சாளரத்திலும் கடுமையாகப் பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் யாரையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அனைத்து அணிகளும் தரமான எதிரணிகள். நாங்கள் அனைவரும் நாக் அவுட்டில் விளையாடுவதற்கும் எங்களால் முடிந்ததைச் செய்வதற்கும் இது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்.” இவ்வாறு ஷா ஸ்போர்ட்ஸ்டாரிடம் தெரிவித்தார்.