எனக்கு தேவையில்லாத பாராட்ட கொடுக்காதீங்க… வீரர்களுக்குதான் பாராட்டு போகணும்… டிராவிட் கலகல!

யு -19 மற்றும் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராக இருந்த காலத்தில் பல திறமைகளை வளர்த்து வந்த முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவில் இளம் துப்பாக்கிகளின் செயல்திறனுக்காக தனக்கு ‘தேவையற்ற’ கடன் கிடைக்கிறது என்று கூறினார். ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், சுப்மான் கில் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் பங்கேற்ற டிராவிட் 2016 மற்றும் 2019 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தியிருந்தார். இந்தியா ஏ அணியின் ஒரு பகுதியாக முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஹனுமா விஹாரி, மாயங்க் அகர்வால் ஆகியோர் திராவிடத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

டெல்லி : கடந்த வாரம் நடந்து முடிந்துள்ள இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றியை அணியின் இளம் வீரர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அன்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் கோச்சாக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட்டே இளம் வீரர்களின் இந்த செயல்பாட்டிற்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றன.

இதனிடையே, தேவையில்லாத பாராட்டை தனக்கு கொடுக்க வேண்டாம் என்றம் வீரர்களுக்கே பாராட்டு சென்று சேர வேண்டும் என்றும் ராகுல் டிராவிட் தெரிவிததுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது. மூத்த வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய நிலையில், இளம் வீரர்களை அதிகமாக கொண்ட இந்திய அணி இந்த வெற்றிச் சாதனையை படைத்துள்ளது.
குறைவான அனுபவமே கொண்ட இளம் வீரர்கள் இந்த சாதனையை மேற்கொண்ட நிலையில், அவர்களுக்கு மனவலிமையை அன்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியின் கோச் ராகுல் டிராவிட் வழங்கியதாக அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட இளம் வீரர்கள் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் வியப்பிற்குரிய பங்களிப்பை அளித்துள்ளனர். இதற்கும் மேலாக அந்த தொடரில்தான் தங்களது அறிமுக ஆட்டங்களை சிராஜ் உள்ளிட்டவர்கள் ஆடினர்.
அன்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணியில் உள்ள வீரர்களுக்கு சிறப்பான பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகிறார் ராகுல் டிராவிட். இந்நிலையில் இளம் வீரர்களுக்கே அனைத்து பாராட்டுக்களும் சென்றடைய வேண்டும் என்றும் தேவையில்லாமல் தனக்கு பாராட்டை அளிக்க வேண்டாம் என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "எனக்கு தேவையில்லாத பாராட்ட கொடுக்காதீங்க… வீரர்களுக்குதான் பாராட்டு போகணும்… டிராவிட் கலகல!"

Leave a comment

Your email address will not be published.


*