ஊழல் புகாரில் சிக்கிய பாக் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டு தடை!

லாகூர்: ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல், 29 வயது. இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடருக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் ஊழல் தடுப்பு பிரிவு விதிகளை மீறிய காரணத்துக்காக இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

3 ஆண்டு தண்டனை
இந்நிலையில் இவரின் விதிமீறல் குறித்து ஒழுங்கு நடவடிக்கை பேனலுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று லாகூரில் நடந்த விசாரணையில் அக்மலுக்கு மூன்று ஆண்டு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்மலின் கிரிக்கெட் வாழ்வை இந்த தடை மிகப்பெரிய கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏற்கனவே தகராறு
இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கு முன்பாக நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வின் போதும் உமர் அக்மல் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் எழுந்தது. ஆனால் அதற்கு பின் நடந்த விசாரணையில் தவறான புரிதலால் தான் இந்த சிக்கல் ஏற்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அவரை விட்டது.

Be the first to comment on "ஊழல் புகாரில் சிக்கிய பாக் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டு தடை!"

Leave a comment

Your email address will not be published.


*