உள்ளூர் கிரிக்கெட்… பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் யுவராஜ் சிங்?!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்,சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணிக்காக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து கனடாவில் நடைபெற்ற டி20 தொடரில் பங்கேற்று விளையாடினார்.

இந்நிலையில், அவர் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் பஞ்சாப் அணிக்காகப் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பஞ்சாப் அணி வெளியிட்ட 30 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஆனால் பிசிசிஐயின் விதிமுறைப்படி, யுவராஜ் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் கால் தடம் பதிக்க முடியாது எனக் கூறப்படுகிறது.

காரணம், இந்திய அணியில் விளையாடுபவர், ஓய்வு பெற்றவர் எவரும் வெளிநாட்டு தொடர்களில் பங்கேற்றுவிட்டு மீண்டும் பிசிசிஐ சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் விளையாட இயலாது. இதனால், கனடா பிரிமியர் டி20 தொடரில் பங்கேற்ற யுவராஜ் சிங்கிற்கு சிக்கல் எழுந்துள்ளது. இந்த சிக்கலைப் போக்க, பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், அவரை நாங்கள் கௌரவமாக வழியனுப்ப முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ இதுகுறித்து இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. சாதகமான முடிவு வரும் எனக் கருதி தற்போது யுவராஜ் சிங் மொகாலியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த ஆண்டின் சையத் முஷ்டாக் அலி டி 20 க்கான பஞ்சாப் நிகழ்தகவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு பிரபலமான வீரர் பாரிந்தர் ஸ்ரான் ஆவார். பஞ்சாப் விஜய் ஹசாரே டிராபி அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு சண்டிகருக்கு செல்ல சீமர் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர் நடைபெறும் தேதியை தற்போது பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 10ஆம் தேதி துவங்கி 31ஆம் தேதி இத்தொடர் நடைபெற உள்ளது. இதற்காக, அனைத்து அணிகளும் வீரர்கள் பட்டியலைத் தயார் செய்து வருகின்றன. பஞ்சாப் அணி தேர்வு செய்த வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங், மந்தீப் சிங், சந்தீப் ஷர்மா போன்றவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. உத்தரப் பிரதேச அணியை சுரேஷ் ரெய்னா வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "உள்ளூர் கிரிக்கெட்… பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் யுவராஜ் சிங்?!"

Leave a comment

Your email address will not be published.