உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? – கனே வில்லியம்சனின் விளக்கம்…

www.indcricketnews.com-indian-cricket-news-89

2019ஆம் ஆண்டு துவங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர், கொரோனாவை  எதிர்கொண்டு கடந்த மாதம் முடிந்தது.  இதில் பிற அணிகளை பின்னுக்குதள்ளி முதல் இரண்டு இடங்களை பிடித்த கோலி தலைமையிலான இந்தியாவும், கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதினார்கள். இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக ஐசிசி சாம்பியன் கோப்பை வென்றது. இதன் மூலம் அந்த அணியின் பல ஆண்டுகால ஐசிசி கோப்பை கனவு பலித்தது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தபோது வில்லியம்சன், கோலியின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டார்.இப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற 53 ஓவர்களில் 139 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. துவக்க வீரர்கள் கான்வே, லதாம் இருவரும் ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். அந்த நேரத்தில் களமிறங்கிய அனுபவ வீரர்கள் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிபெற்றச் செய்தனர். இறுதியில் டெய்லர் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்று கொடுத்தார்.  கேப்டன் வில்லியம்சன் இந்த வெற்றியைக் கொண்டாடாமல், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் நெஞ்சில் சாய்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டார்.இது கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் வெற்றிக் களிப்பில் இருந்து வெளியே வந்துள்ள கனே வில்லியம்சன் இறுதிப் போட்டியில் தான் ஏன் கோலியின் நெஞ்சில் தலை சாய்ந்தேன் என்பது குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.கிரிக்கெட் தளமான கிரிக்பஸ்-க்கு கனே வில்லியம்சன் அளித்துள்ள பேட்டியில், “இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அந்த தருணம் மிகசிறப்பானது. இந்தியாவுடன் எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது மிகவும் கடினமானதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரிந்த விஷயமே. எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நெருக்கடி எங்களுக்கு ஏற்படவே செய்யும். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ராஸ் டெய்லருடன் கொண்டாடுவதற்கு பதிலாக கோலியின் நெஞ்சில் ஏன் சாய்ந்தேன் என கேட்கிறீர்கள்.எனக்கும் விராட் கோலிக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டு விட்டது. கிரிக்கெட்டையும் கடந்து ஒரு ஆழமான நட்பு எங்களுக்குள் இருந்து வருகிறது. அது எங்கள் இருவருக்குமே தெரியும்.” என்றார் வில்லியம்சன்.மேலும், இரு அணிகளும் மிகவும் போட்டித்தன்மையுடன் இருந்தோம்,  விளையாட்டு மிகவும் நெருக்கடியாக இருந்தது. இறுதி முடிவு உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்கிறது என்று எனக்குத் தெரியும். போட்டி முழுவதும்,  கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். அது போன்ற ஒரு நீண்ட கடினமான போட்டிக்குப் பிறகு, இரு அணிகளுக்கும் ஒரு பாராட்டு இருக்கின்றது. ஒரு அணி கோப்பையைப் பெறுகிறது, ஒரு அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கும் மற்றொரு அணிக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்காது.” என்றார் வில்லியம்ஸ்.

Be the first to comment on "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்குபிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்தது ஏன்? – கனே வில்லியம்சனின் விளக்கம்…"

Leave a comment