உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி செய்த சில தவறுகள்…

www.indcricketnews.com-indian-cricket-news-56

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து சவுத்தம்டனில் நடைபெற்றது.போட்டியும் 18-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால்போட்டிக்கு முந்தைய நாளே இந்திய அணி ஆடும் லெவனை அறிவித்தது.நியூசிலாந்து தந்திரமாக ஆடும் லெவனை அறிவிக்கவில்லை. அந்த அணியில்4 வேகப்பந்து வீச்சாளர்கள்,மற்றும்ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதாக இருந்தது.விமர்சகர்கள், இந்தியா ஆடும் லெவனை மாற்றலாம்.இரண்டு ஸ்பின்னர்கள் தேவையில்லை என்றார்கள்.ஆனால், அணி நிர்வாகம் அதே ஆடும் லெவன் அணியோடு களம் இறங்கியது. இந்திய அணி செய்த முதல் தவறு இதுதான்.ஆனால் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளரை களம் இறக்காமல் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.மிகவும் கடினமான ஆடுகளத்தில் ரோகித் சர்மா- சுப்மான் கில் ஜோடி 20.1 ஓவர் வரை தாக்குப்பிடித்து 62 ரன்கள் சேர்த்தார்கள்விராட் கோலி, ரஹானே தாக்குப்பிடித்து விளையாடினர். ரிஷாப் பண்ட் 4 ரன்னில் வெளியில் சென்ற பந்தை அடித்து அவுட்டானார். இந்திய அணியின் 2-வது மிகப்பெரிய தவறு இதுதான். ரிஷாப் பண்ட் நிலைத்து நின்றிருக்க வேண்டும்.பொறுமையாக விளையாடிய ரஹானே 49 ரன்னில் தேவையில்லாமல் டீப் மிட்விக்கெட் நோக்கி புல்ஷாட் அடிக்க ஆசைப்பட மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து தேவையில்லாமல் ஆட்டமிழந்தது இந்தியாவின் அடுத்த தப்பு.வழக்கம்போல் டெய்லெண்டர்ஸ்களாக கருதப்படும் கடைசி 4 விக்கெட் 35 ரன்னுக்குள் போக இந்தியா 217 ரன்னில் ஆல்அவுட்.நியூசிலாந்து முதல் இன்னிங்சில் முதல் விக்கெட்டுக்கு 34.2 ஓவர்கள் விளையாடிவிட்டது.அஸ்வின் முதல் விக்கெட்டை வீழ்த்த, அதன்பின் நியூசிலாந்து ஆட்டம் காண ஆரம்பித்தது. 162 ரன்னிற்குள் 6 விக்கெட்டை இழந்த நியூசிலாந்து எப்படியும் 200-க்குள் ஆல்-அவுட் ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து டெய்லெண்டர்ஸ்கள் கடைசி நான்கு விக்கெட்டுக்கு 87 ரன்கள் எடுத்துவிட்டனர். இவர்களை அடிக்க விட்டதுதான் இந்தியாவிற்கு மிகப்பெரிய இழப்பு. அத்துடன் நியூசிலாந்து 32 ரன்கள் லீட் வைத்துவிட்டது.ரிஷாப் பண்ட் 41 கூடுதலாக ஐந்து ஓவர்கள் நின்றிருந்தால் போட்டியின் நிலையே மாறியிருக்கும். அதன்பின் என்ன?14 ரன்னுக்குள் கடைசி 3 விக்கெட்டை இழக்க இந்தியா 170 ரன்னில் சுருண்டது.இந்த தவறுகள் எல்லாம் சேர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்க காரணமாக அமைந்துவிட்டது.இந்த வருடத்திலேயே இந்தியாவுக்கு மற்றொரு வாய்ப்பு இருக்கிறது. இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கவுள்ளது.

Be the first to comment on "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணி செய்த சில தவறுகள்…"

Leave a comment

Your email address will not be published.


*