உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி…

www.indcricketnews.com-indian-cricket-news-53

ரிசர்வ் டே (6ஆவது நாள்) வரை நடைபெற்ற உலக டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, கோப்பையை வென்றது.இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 217/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது.அதிகபட்சமாக அஜிங்கிய ரஹானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.அதன்பிறகு தங்களின் முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி துவக்கத்தில் நிதானமாக விளையாடியது. ஓபனர்கள் கான்வே, லதாம் இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். தொடர்ந்து மற்றவர்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. இறுதியில் வில்லியம்சன் (49), டிம் சௌதீ (30) ஓரளவுக்குத் தாக்குப்பிடித்து ரன்களை சேர்த்ததால், முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 249/10 அடித்து, 32 ரன்கள் முன்னிலை பெற்றது.32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா (30), ஷுப்மன் கில் (8) இருவரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். புஜாரா 12 (55), விராட் கோலி 8 (12) களத்தில் இருந்த நிலையில், ஐந்தாவது நாள் முடிவுவரை இந்திய அணி 64/2 ரன்கள் சேர்த்து 32 ரன்கள் முன்னிலை பெற்றது.6ஆவது நாள் அதாவது ரிசர்வ் டேவில் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சோபிக்கவில்லை. இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.அதிகபட்சமாக ரிஷப் பந்த் 41 ரன்கள் அடித்தார்.ரிசர்வ் டேவின் இரண்டாவது செஷன் பாதி இருந்தபோது நியூசிலாந்து அணி களமிறங்கியது.ஓபனர்கள் லதாம் 9 (41), கான்வே 19 (47) இருவரும் அஸ்வினில் சுழலை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.இதனால் நியூசிலாந்துக்குக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. இருப்பினும் அடுத்துக் களமிறங்கிய அனுபவ வீரர்கள் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் நெருக்கடிகளை சிறப்பாகச் சமாளித்து அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து சென்றனர்.வில்லியம்சன் 52 (89) ரன்களும், ராஸ் டெய்லர் 47 (100) ரன்களும் சேர்த்தார்கள்.இறுதியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கோப்பையை வென்றது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு, நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இந்த அனுபவம் அவர்களுக்கு கை கொடுத்தருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Be the first to comment on "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி…"

Leave a comment