உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – 5ம் நாள் ஆட்ட நிலவரம்

www.indcricketnews.com-indian-cricket-news-38

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட, 2வது நாள்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 217/10 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக அஜிங்கிய ரஹானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 22 ஓவர்கள் வீசி 31 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். மற்றும் 3வது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை ஏற்பட,முதல் இன்னிங்ஸை துவங்கிய நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவுவரை 101/2 ரன்கள் சேர்த்தது. கேன் வில்லியம்சன் 12 (37), ராஸ் டெய்லர் 0 (2) களத்தில் இருந்தார்கள். 4வது நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 5ம் நாள்ஆட்டமும் மழையால் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் 49 ரன்னும், சவுத்தி 30 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் 3 விக்கெட்டும், அஷ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் களமிறங்கினர். சுப்மான் கில் 8 ரன்னில் சவுத்தியிடம் அவுட்டாகி வெளியேறினார். நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 30 ரன்னில் சவுத்தியிடம் வீழ்ந்தார். புஜாராவும், அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 12 ரன்னுடனும், கோலி 8 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். நியூசிலாந்து சார்பில் சவுத்தி 2 விக்கெட் வீழ்த்தினார். மேலும் இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி இருவரும் சிறப்பாகப் பந்துவீசுவதால், நியூசிலாந்தை இரண்டு செஷன்களில் தோற்க்கடிப்பதற்க்கு வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், பும்ரா பும்ரா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது இந்திய அணிக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மேலும், மழை வராமல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இல்லையென்றால் போட்டி டிரா ஆகுவதற்குத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Be the first to comment on "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – 5ம் நாள் ஆட்ட நிலவரம்"

Leave a comment

Your email address will not be published.


*