உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்தியாவின் ஆடும் லெவன் அணி அறிவிப்பு

www.indcricketnews.com-indian-cricket-news-20

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சார்பில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கப்பட்டது. டெஸ்டில் விளையாடும் 9 நாடுகள் இதில் பங்கேற்றன.புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த தொடரின் பல போட்டிகள் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதிப் போட்டிக்கு நுழையும் முறை மாற்றப்பட்டது.வெற்றி சதவீத அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன.இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டன் நகரில் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மூன்று வேகப்பந்து, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றிரவு ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடும் லெவன் அணியில் முகமது சிராஜிக்கு இடமில்லை. அனுபவம் என்ற வகையில் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா இடம் பிடித்துள்ளனர்.இந்திய அணியில் இடம் பிடித்துள்ள 11 வீரர்கள் விவரம்:-1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா, 3. ஷுப்மான் கில், 4. புஜாரா, 5. ரகானே, 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8.  அஷ்வின், 9. பும்ரா, 10. இஷாந் சர்மா, 11. முகமது ஷமி.இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி முதல் ஐ.சி.சி. உலக டெஸ்ட் கோப்பையை வெல்லுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.இந்திய அணி கடைசியாக நியூசிலாந்துடன் விளையாடிய 2 டெஸ்டிலும் தோற்று இருந்தது. 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து மண்ணில் இந்த தோல்வி ஏற்பட்டது.

ஆனால் அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கணக்கிலும் சொந்த மண்ணில் இங்கிலாந்தை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. இதனால் விராட்கோலி அணி மிகுந்த நம்பிக்கையுடன் இறுதி போட்டியில் விளையாடும்.

Be the first to comment on "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி: இந்தியாவின் ஆடும் லெவன் அணி அறிவிப்பு"

Leave a comment