மும்பை: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக நடந்துமுடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரில், இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் ஆடும் லெவனை இறுதி செய்துள்ளதாகவும், மிடில் ஆர்டர் பேட்டர் சூர்யகுமார் யாதவ் அதில் ஒரு பகுதியாக இருப்பதாகவும் தெளிவுபடுத்தினார்.
ஏனெனில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யக்குமார் யாதவ் 50(49) ரன்கள் குவித்து, தனது பேட்டிங் மூலம் அனைத்து விமர்சகர்களுக்கும் பதிலளித்தார்.
அதேசமயம், துரதிர்ஷ்டவசமான ரன் அவுட் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பெரிய ஸ்கோரைத் தவறவிட்டார். ஆனால் இந்தூரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபார சதத்துடன் பிரீமியர் பேட்டரான ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கான இடத்தை வலுப்படுத்தினார். அதேசமயம் சூர்யக்குமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, தனது அபாரமான பேட்டிங் மூலம் இந்தியாவை 399-5 என்ற மாபெரும் ரன்னுக்கு தள்ளினார்.
இருப்பினும் விராட் கோலி இல்லாத இந்திய அணி உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் தோல்வியடைந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவின் பல பிரச்சனைகளைப் பற்றி ஐசிசி நிகழ்வில் விவாதித்த முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கும் சூர்யகுமார் யாதவ் மீது ஒரு கண் வைத்திருப்பதாக கூறினார்.
மேலும் இதுகுறித்து பேசுகையில்,”நான் அவரை மிகவும் நெருக்கமாக கவனித்து வருகிறேன். ஏனென்றால் டாப் ஆர்டர் வீரர்கள் ரன்களை குவிக்க தவறினால், மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சூர்யக்குமார் யாதவ் களமிறங்கி ரன்களை குவிப்பர் .ஒருவேளை அனைத்து பேட்டர்களும் ரன்கள் எடுத்தால், x- காரணியாக மாறி அவரால் ஆட்டத்தை வெற்றிப் பெற முடியும்.
ஏனென்றால் மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியாவுடன் அவர் ஏற்படுத்தக்கூடிய பார்ட்னர்ஷிப் மூலம், கடைசி 6 ஓவர்களில் கூட எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை அவர்களால் கைப்பற்ற முடியும். இந்திய நிலைமைகளில், மிகவும் அரிதாகவே அது போராடும். நீங்கள் 1-2-3-4 – நூறு எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியும். அவர் எப்பொழுதும் என் 12 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருப்பார். இந்த தட்டையான பாதையில், நான் சூர்யாவைப் பற்றி நினைப்பேன். ஏனென்றால் மற்ற 3-4 வீரர்கள் ரன்கள் குவிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
அதேசமயம் நிலைமை கடினமானதாகவோ, தந்திரமானதாகவோ அல்லது எதுவாக இருந்தாலும், உங்களுக்குத் தெரியாது. உங்களிடம் 5 முறையான பேட்டர்கள் உள்ளனர். அந்த ஐந்து வீரர்களும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அதற்கு பதிலாக நம்மிடம் ஒரு எக்ஸ்-காரணி உள்ளது. இடது கை வீரராக இருக்கலாம். அது சூர்யாவாக இருக்கலாம்” இவ்வாறு சாஸ்திரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Be the first to comment on "உலகக் கோப்பையில் இந்திய அணியின் முக்கிய வீரராக சூர்யகுமார் இருப்பார் என்று சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்."