இளம்வயதிலே ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற சிட்சிபாஸ்

உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள முன்னணி வீரர்கள் பங்கேற்ற ஏடிபி பைனல்ஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது. இதில் டென்னிஸ் ஜாம்பவான்கள் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், கிரிஸைச் சேர்ந்த ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில், டொமினிக் தீம்க்கு, 21 வயதான இளம் வீரர் சிட்சிபாஸ் கடும் சவால் அளித்தார். முதல் செட்டில் இரு வீரர்களும், மாறிமாறி முன்னிலை வகித்தனர். டை பிரேக்கர் வரை சென்ற இந்த செட்டை தீம் கைப்பற்றினார்.

டாப் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் தொடர் முடிவிற்கு வந்தது. நடால், ஜோகோவிச், பெடரர் என முன்று ஜாம்பவன்கள் இருந்தும் அவர்களால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.

டோமினிக் தியம் – ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதிய இறுதி போட்டியில் 6-7 (6/8), 6-2, 7-6 (7/4) என செட் கணக்கில் சிட்சிபாஸ் வெற்றி பெற்று அசத்தினார். 21 வயதான சிட்சிபாஸ், பெடரர், நடால், ஜோகோவிச் ஆகியோரிடம் இருந்து டென்னிஸ் அடுத்த தலைமுறைக்கு செல்வதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டு இந்த ஏடிபி பைனல்ஸ் தொடரை வென்ற லீடான் ஹெவித்தை தொடர்ந்து இந்த பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றார் சிட்சிபாஸ்.

சிட்சிபாஸ் இந்த ஆண்டு வெல்லும் 3 வது பட்டம் இதுவாகும். இந்த தொடரின் அரையிறுதியில் பெடரரை நேர் செட் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் சிட்சிபாஸ்.

ஏடிபி பைனல்ஸ் கோப்பையை இதுவரை பெடரர் 6 முறையும் ஜோகோவிச் 5 முறையும் வென்றுள்ளனர்.

‘இந்த வெற்றியை என்னால் விவரிக்க முடியவில்லை. 2019 சாம்பியனாக இருப்பது பெருமையளிக்கிறது. கனவு நனவாகியுள்ளது’ என்றார் சிட்சிபாஸ்.

இரண்டாம் இடத்தை பிடித்த  டோமினிக் இந்த ஆண்டு ஐந்து பட்டங்களை வென்றிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிட்சிபாஸ் 2-வது செட்டை வசப்படுத்தினார். வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இரு வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் விளையாடினர். டைபிரேக்கர் வரை நீடித்த இந்த செட்டை வசப்படுத்தியதுடன், கோப்பையை கைப்பற்றினார்,
வெற்றி பெற்ற சிட்சிபாஸ்-க்கு கோப்பையுடன், ஒன்பதரை கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு ‘பிக் 3′ வீரர்களான நடால், ஜோகோவிச், பெடரர் ஆகியோரை வீழ்த்தியிருந்த சிட்சிபாஸ் இந்த ஆண்டை ஏடிபி பைனல்ஸ் கோப்பை மூலம் முடித்தார்.

Be the first to comment on "இளம்வயதிலே ஏடிபி பைனல்ஸ் பட்டத்தை வென்ற சிட்சிபாஸ்"

Leave a comment

Your email address will not be published.


*