பாகிஸ்தான் – இலங்கை இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால்
கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கராச்சி மைதானத்தில்
பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது.
பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் ஜமான்,
இமாம் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு
14.4 ஓவரில் 73 ரன்கள் சேர்த்தது. இமாம் உல் ஹக் 31 ரன்னிலும், பகர் ஜமான் 54 ரன்களிலும்
ஆட்டமிழந்தனர்.
இதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜெயசூர்யா,
ஷனகா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து அணியின் ரன்
விகிதத்தை உயர்த்திய நிலையில் ஆட்டத்தின் 40.5வது ஓவரில் ஜெயசூர்யா 96 ரன்கள் எடுத்திருந்த
நிலையில் உஷ்மான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து
ஷனகா (68) ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனையிடைய பாகிஸ்தான் அணி வீரர்கள் பந்து
வீச்சில் நிலைத்து நின்று விளையாட முடியாத நிலையில் இசுரு உதனா (1), லகிரு குமாரா
(1), ஹசரங்கா (30) என தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் இலங்கை அணிவீரர் நுவன்
பிரதீப் களத்தில் இருந்தார்.
இதன் மூலம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் உஷ்மான் 5 விக்கெட்களையும், கான் 2
விக்கெட்களையும், அமிர், வாசிம், ரியாஷ் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர். ஜாவித்
மியான்தத்தின் 32 வருஷ சாதனையை மிரட்டலாக முறியடித்த பாபர் அசாம்.
Be the first to comment on "இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி"