இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி

இலங்கை வீரர் தனுஷ்காவின் சதம் பாகிஸ்தானுக்கு எதிராக வீணானது. மூன்றாவது ஒருநாள்  போட்டியில் பாகிஸ்தான் இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

மூன்று ஒருநாள் போட்டியின் முதல் ஆட்டம் மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் 67 ரன்னில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கராச்சியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

 அதோடு மட்டுமின்றி 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. முன்னதாக முதலில் பேட் செத இலங்கை அணி 50 ஓவர்களில் 297/9 என்ற ரன்களை குவித்தது. இதனை பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் எட்டி தொடரை வென்றது. இது கடந்த 15 மாதங்களில் பாகிஸ்தானின் முதல் தொடர் வெற்றியாகும். இந்தத் தொடரில் முதல் போட்டி மழையால் தடைப்பட்டது. இரண்டாவது போட்டியை பாகிஸ்தான் வென்றது.

பாகிஸ்தான் அணிக்யின் பக்தர் சமான் மற்றும் அபிட் அலி ஆகிய இருவரும் 20 ஓவர்களில் 123 ரன்கள் குவித்தனர். ஹாரிஸ் சோகைல் 56 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியாக அகமது 22 பந்தில் 28 ரன்களை குவித்து இலக்கை எட்ட வைத்தார்.

இது எளிமையான இலக்கு அல்ல அபிட்டின் ஆட்டம் தான் ஊக்கம் தந்தது என்று அதுதான் இந்த இலக்கை துரத்த காரணம் என்றார் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது.

இலங்கை கேப்டன் லகிரு திரிமணே முக்கிய வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இடம்பெறாததே தோல்விக்கு காரணம் என்றார்.

ஆனால் அணியின் செயல்பாடு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். 297 ரன்களை குவித்தது சிறப்பான விஷயம் தான், மற்றும் முதல் 10 ஓவர்களை கட்டுப்படுத்த தவறிவிட்டோம் என்றார்.

பாகிஸ்தானில் தங்குவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கிறது. மற்றும் இது மற்ற அணிகளும் இங்கு வந்து விளையாட வகை செய்யும் என்றார்.

பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 5 ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்டது. இப்திகார் பவுண்டரி மற்றும் சிக்ஸரை விளாச வெற்றி பெற்றது பாகிஸ்தான். 2017ம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 8 போட்டிகளை பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக வென்றுள்ளது.

2015க்கு பிறது ஜிம்பாப்வே, உலக லெவன், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி ஆட சென்றன.

 

Be the first to comment on "இலங்கைக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி"

Leave a comment

Your email address will not be published.


*