இரண்டு இளம் வீரர்களுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்ததற்காக பிசிசிஐ தேர்வாளர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

www.indcricketnews.com-indian-cricket-news-10080

மும்பை: கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் 15-வது சீசன்,  இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது.  இதனையடுத்து இந்தியாவுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் முதல் மீண்டும் தொடங்கவிருக்கிறது. அதன்படி இந்தியா வரவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி வரும் ஜூன் 9ஆம் தேதி முதல் ஜூன் 19ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

மேலும் இத்தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை கடந்த வாரம் பிசிசிஐ துவங்கியிருந்தது. இதில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர்   ஓய்வில்லாமல் தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, தென்னாப்பிரிக்கா ,ஐபிஎல் என அனைத்திலும் பங்கேற்று விளையாடி வருவதால், அவர்களுக்கு தென்னாப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி அவர்களுக்கு ஓய்வு அறிவித்த இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மே 22ஆம் தேதியன்று(ஞாயிற்றுக்கிழமை) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணியை அறிவித்தது. இதில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுலும், ஷிகர் தவான் அணியிலிருந்து நீக்கப்பட்டு துணை கேப்டனாக ரிஷப் பந்த்-ம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த இந்திய டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஐபிஎல்-ல் நன்றாக விளையாடிய சீனியர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்,தீபக் ஹூடா, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆனால் ஐபிஎல்-ல் ஒவ்வொரு சீசனிலும் நல்ல ஸ்கோர் செய்து அபாரமாக விளையாடி தனது திறமையை தொடர்ந்து நிரூபித்துவரும் ராகுல் திரிபாதி மற்றும் அதிரடியாக விளையாடும் விக்கெட் கீப்பர், ஆட்டத்தை தனியாளாக மாற்றும் திறன் என பல திறமைகள் கொண்ட சஞ்சு சாம்சன் ஆகிய இருவருக்கும் இந்த டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐபிஎல் 2022-ல் சரியாக ஆடாமல், தனது 12 இன்னிங்ஸ்களில் 182 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்த ( இரண்டு இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 50 மற்றும் 43 ரன்கள்,10 இன்னிங்ஸ்களில் 89 ரன்கள்) வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது குறித்து முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங், ராகுல் திரிபாதி இந்திய அணியில் இடம்பெற தகுதியானவர். அவருக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது என்று ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்த தேர்வின்  முடிவுகளால் அதிருப்தியடைந்த நெட்டிசன்கள் அணி தேர்வை விமர்சித்துள்ளனர் .குறிப்பாக வெங்கடேஷ் ஐயர்-க்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது எனவும், சஞ்சு சாம்சன் மற்றும் திரிபாதி ஆகிய இருவரையும் எடுக்காதது இந்திய அணிக்குத்தான் பேரிழப்பு என்றும் ரசிகர்கள் பலர் கருத்து கூறிவருகின்றனர்.

Be the first to comment on "இரண்டு இளம் வீரர்களுக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயரை தேர்வு செய்ததற்காக பிசிசிஐ தேர்வாளர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்."

Leave a comment

Your email address will not be published.


*