இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த மூத்த வீரரை நீக்குவதால் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-0102

டெல்லி: இந்தியா- நியூஸிலாந்துக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,ரஹானேவை நீக்குவது அல்லது அமரவைப்பது குறித்து கருத்துக்கள் பல நிலவி வருகின்றன.

ஏனெனில், நடப்பு 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் சராசரியாக 19.6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்நிலையில், கான்பூரில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் (35,4)  ரன்கள் எடுத்து கோட்டைவிட்டார். கடந்த 25 இன்னிங்ஸ்களில்  2 அரைசதம், ஒருசதம் மட்டுமே எடுத்துள்ள ரஹானே மற்ற இன்னிங்ஸ்களில்  சராசரியாக 20 ரன்களுக்கு மேல் தாண்டவில்லை.

இதில், இளம் வீரர்களான சுப்மன் கில், ஹனுமா விஹாரி, சூர்யகுமார் யாதவ்  வாய்ப்புக்காக காத்திருந்த போதிலும், ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி (105,65) ரன்கள் எடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பட்டையைக் கிளப்பிவிட்டார். 

மேலும்,நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் முதலாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளாத விராட் கோலி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ளதால்,ஏதாவது ஒரு வீரரை வெளியேற்ற வேண்டியுள்ளது. அவ்வாறு வெளியேற்றப்படும் வீரர் ரஹானேவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்தாகும்.

இதுகுறித்து, ஒரு இணையதளத்துக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்  அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:

“ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி அசத்தியுள்ளார். மேலும்,அவரது பேட்டிங்கால் ஏற்படும் அழுத்தம் தற்போது உண்மையில் ரஹானே மீதுதான் திரும்பியுள்ளது. இதனால் மும்பையில் நடக்கவிருக்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ரஹானே நீக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா பயணத்தின்போது,   ஒரு போட்டியில் ரஹானே அமரவைக்கப்பட்டு

மீண்டும் அழைக்கப்பட்டார். அதேபோன்று, இந்தபோட்டியிலும் அவரை அமரவைக்கப்படுவதால், இந்திய அணிக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

 இந்தியாவை முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது சிறப்பான பேட்டிங்கால் பல சந்தர்ப்பங்களில் காப்பாற்றிவிட்டார். கடந்த டெஸ்ட் போட்டிகளில் ரஹானே எடுத்த ரன்களை போல் ஸ்ரேயாஸின் பேட்டிங் இல்லை.எனவே, ரஹானேவை ஒரு போட்டியிலிருந்து நீக்குவதால் எந்த பாதகமும் ஏற்படாது, இவ்வாறு செய்வதன் மூலம்,ரஹானே மீதான அழுத்தம் குறையவும் வாய்ப்புள்ளது.

 புஜாரா மீது இதுபோல அழுத்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனெனில்,  இவர் பல இன்னிங்ஸில் சதம் அடித்தவர். ஆனால், கடந்த 2020ஆம் ஆண்டு தொடக்கம் முதல்  அவரும் சராசரியாக 20 ரன்கள் தான் எடுக்கிறார். இரு வீரர்களும் தங்களின் தரத்தை உயர்வாக வைத்திருந்தாலும் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் சிறப்பாக விளையாடவி்ல்லை என்பது அவர்களுக்கே தெரியும்” இவ்வாறு அந்த பேட்டியில் தெரிவி்த்துள்ளார்.

Be the first to comment on "இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்த மூத்த வீரரை நீக்குவதால் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*