இப்போ ஐபிஎல் நடத்துவது ஏன் முக்கியம் தெரியுமா: காம்பீர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். இவர் தற்போது கிழக்கு டெல்லியின் எம்.பி யாகவுள்ளார். கொரோனா தாக்கத்தால் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகளவில் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் மக்களின் மனநிலையை மாற்றுவது மிகவும் அவசியம் என காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் அவசியம்
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடத்துவது மிகவும் முக்கியம் என்றும், இதனால் மக்கள் உற்சாகமடைவார்கள் என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “ஒரு அரசியல்வாதியாக என்னிடம் கேட்டால் மக்களின் உயிர்களை காப்பது தான் முக்கியம் என்பேன். ஆனால் நாட்டில் தற்போது நிலவும் சூழலில் மக்களின் மனநிலையை மாற்ற, ஐபிஎல் போட்டிகளை நடத்துவதை தவிர வேறு எதுவும் சிறந்ததாக இருக்காது.

கேள்வி எழும்
இந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் தான் முக்கியமா என அனைவரும் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் ஐபிஎல் இந்தாண்டு நடத்தப்பட்டால், இரு இந்தியனாக எந்த அணி கோப்பை வெல்கிறது என்பதை கவனிக்கமாட்டார்கள், ஒரு நாட்டிற்கு கிடைத்த உற்சாகமாகவே நினைப்பார்கள்.

உலகமே நிற்கும் போது, நெகட்டிவ் நம்மை சுற்றி இருக்கும். ஆனால் மக்கள் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் போது, சூழ்நிலை நிச்சயமாக மாறும். அதனால் கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரை விட இந்தாண்டு நடப்பது மிகவும் அவசியம். ரசிகர்கள் இல்லாமல் நடந்தாலும், வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் இருந்தாலும், யார் வென்றாலும் பெரிய விஷயமே இல்லை. இதில் நாடு வெற்றி பெறும்” என்றார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தாண்டு 13ஆவது தொடர் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் நடத்த வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த யோசனைக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காலி மைதானத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஆதரவு அளித்துள்ளார்.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உடன் உரையாடினார். இதுகுறித்து பாண்டியா கூறுகையில், “கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது வித்தியாசமானது. ரஞ்சி போட்டிகள் காலி மைதானத்தில் விளையாடி உள்ளோம். ஐபிஎல் போட்டிகளை காலி மைதானத்தில் விளையாடுவது புதிய அனுபவம் தான்.

Be the first to comment on "இப்போ ஐபிஎல் நடத்துவது ஏன் முக்கியம் தெரியுமா: காம்பீர்!"

Leave a comment

Your email address will not be published.