இப்போதே.. ஆள் அனுப்பிய பிசிசிஐ.. கங்குலி பிளான் எப்போதும் ‘பக்கா’!

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா பரவியது. இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல்லை பிசிசிஐ ஒத்திவைத்தது.

மே.29 அன்று பிசிசிஐ சார்பில் நடந்த “SGM” மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் – அக்டோபர் வரை மீதமுள்ள போட்டிகள்  நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை இன்று உறுதி செய்யவில்லை.

இந்நிலையில், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அமீரகம் சென்றிருக்கிறார். மீதமுள்ள போட்டிகளை எந்தவித சிக்கலுமின்றி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவர் அமீரகம் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கலீஜ் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், “இங்குள்ள கிரிக்கெட் வாரியம் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஐபிஎல் குறித்து கலந்துரையாடுவோம். அதன்படி அட்டவணை உருவாக்கப்படும். குறிப்ப்பாக,கடந்த ஆண்டு இங்கு ஐபிஎல் நடந்ததைப் போல இம்முறையும் எந்த பிரச்சனையும் இன்று நடத்த வழிவகை செய்யப்படும்” என்றார். அதுமட்டுமின்றி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் சேர்மேன் ப்ரிஜேஷ் படேல் ஆகியோர் இன்னும் இரு நாட்களில் அமீரகம் வந்து சேருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அங்கு நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

Be the first to comment on "இப்போதே.. ஆள் அனுப்பிய பிசிசிஐ.. கங்குலி பிளான் எப்போதும் ‘பக்கா’!"

Leave a comment

Your email address will not be published.


*