இன்னா அடி… விராட் -படிக்கல் அதிரடி… சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்… சிறப்பான வெற்றி!

Padikkal century, Kohli fifty guide RCB to a 10-wicket win
Padikkal century, Kohli fifty guide RCB to a 10-wicket win

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் சென்னையில் விளையாடியுள்ள ஆர்சிபி முதல் முறையாக மும்பையில் தனது போட்டியை இன்றைய தினம் விளையாடவுள்ளது.

இதில் ஆர்சிபி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தனர். 16வது போட்டி -ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பீல்டிங்கை தேர்வு செய்தது. ஐபிஎல்-ல் ராயல் சேலஞர்ஸ் அணி விளையாடும் 200வது போட்டி இதுவாகும். எனவே இதில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக தயாராகி வருகிறது.தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

உயர்ந்த ஸ்கோர் – இதையடுத்து அந்த அணியின் ஷிவம் தூபே, ராகுல் டிவேட்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்புகளை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் 18 பந்துகளில் 21 ரன்களை அடித்து வாஷிங்டன் சுந்தர் பௌலிங்கில் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் அதிரடி- இதேபோல ஆர்சிபி பௌலர்கள் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பௌலர்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அந்த அணியை அதிகமாக ரன்களை குவிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து 177 ரன்களை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி எடுத்திருந்தது.

விராட் -படிக்கல் சிறப்பு இதையடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆர்சிபி அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் ஆட்டத்தை முடித்து வைத்தனர். அவர்கள் இருவரும் இலக்கை 16.3 ஓவர்களிலேயே முடித்தனர். விராட் கோலி 72 ரன்களையும் படிக்கல் 101 ரன்களையும் குவித்தனர்

சிறப்பான சேஸிங் -அவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க மேற்கொண்ட எதிரணியின் முயற்சிகள் அனைத்தும் பலிக்காமல் போனது. 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆர்சிபி தங்களுடைய இலக்கை அநாயாசமாக அடித்து துவம்சம் செய்தனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத படிக்கல், இந்த போட்டியில் சேர்த்து வைத்து அதிரடி காட்டினார்.

Be the first to comment on "இன்னா அடி… விராட் -படிக்கல் அதிரடி… சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்… சிறப்பான வெற்றி!"

Leave a comment

Your email address will not be published.


*