இந்த வருசத்துக்கு மட்டும்தான் டிரீம்11 : பிசிசிஐ தகவல்

222 கோடிக்கு டிரீம் 11 ஐபிஎல் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டிற்கு 240 கோடி வழங்கி ஸ்பான்சரை தக்க வைக்க டிரீம் 11 ஆர்வமாக உள்ளது.

ஐபிஎல் ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் 4 மாதம் 13 நாட்களுக்கு மட்டும்தான் இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டிற்கான ஸ்பான்ரசர் ரேசில் மீண்டும் சீன நிறுவனம் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது என்று பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்

கடந்த செவ்வாய் கிழமை ஐபிஎல் ஸ்பான்சராக டிரீம் 11 நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. கூடவே பைஜூ மற்றும் அன்அகடாமி நிறுவனங்கள் பார்ட்னர்களாக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டில் 222 கோடியுடன் டிரீம் 11 நிறுவனம் வந்தது போல் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் இதே தொகையுடன் எங்களை அணுகினால், ஒப்பந்தத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும், விவோ நிறுவனம் 440 கோடி தரும்போது அதை ஏன் தாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ நிர்வாகி கூறியுள்ளார்.

பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ நிர்வாகி ஒருவர், “222 கோடிக்கு டிரீம் 11 ஐபிஎல் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டிற்கு 240 கோடி வழங்கி ஸ்பான்சரை தக்க வைக்க டிரீம் 11 ஆர்வமாக உள்ளது. ஆனால், இன்னும் கூடுதல் தொகையுடன் வந்தால் மட்டுமே டிரீம் 11 ஆசை நிறைவேறும்” என்று தெரிவித்தார்.

“நாங்கள் இன்னும் விவோ நிறுவனத்துடனான உறவை முழுமையாக முறிக்கவில்லை, தற்காலிகமாகத் துண்டித்துள்ளோம். விவோ நிறுவனம் ஆண்டிற்கு 440 கோடி தருகிறோம் என்று கூறும்போது, நாங்கள் ஏன் டிரீம் 11 கொடுகுகம் 240 கோடியை ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

“2020ஆம் ஆண்டுற்கு டிரீம் 11 ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறோம். இதற்குமுன் டிரீம் 11 பார்ட்னராக இருந்தது. தற்போது, டைட்டில் ஸ்பான்சராக உயர்ந்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி டிரீம் 11 நல்ல முறையில் தங்களை விளம்பரம் செய்துகொள்ளும்” என்று கூறினார்.

இந்திய நிறுவனத்தை ஸ்பான்சராக தேர்வு செய்தது குறித்துப் பேசிய டிரீம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹரிஷ் ஜெயின், “இந்திய நிறுவனத்தை ஸ்பான்சராக தேர்வு செய்த பிசிசிஐக்கு நன்றி. இந்தியாவில் உருவாக்கப்பட்ட, குறிப்பாக விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனத்தை ஸ்பான்சரகா தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

2021, 2022ஆம் ஆண்டில் சீன நிறுவனம் ஸ்பான்சராக வரமுடியாத பட்சத்தில், மீண்டும் ஏல அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Be the first to comment on "இந்த வருசத்துக்கு மட்டும்தான் டிரீம்11 : பிசிசிஐ தகவல்"

Leave a comment

Your email address will not be published.


*