இந்திய வீராங்கனையின் வைரலாகும் வீடியோ- ஹர்லீன் தியோல் ‘பாய்ந்து பிடித்த கேட்ச்’

www.indcricketnews.com-indian-cricket-news-115

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய வீராங்கனை பிடித்த கேட்ச் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்கனை ஹார்லீன் தியோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் கேட்ச் செய்த விதம் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில்,  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இளம் வீராங்களை ஹார்லீன் தியோல் , இங்கிலாந்தின் ஆமி எலன் ஜோன்ஸை தனது சிறப்பான கேட்ச் மூலம் அவுட் ஆக்கியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 ஒருநாள்  டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி  வருகிறார்கள். இதில் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆட்டத்தை இழந்தது. இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்  தொடங்கியிருக்கிய நிலையில் , நார்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.  முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தார்கள்.  நாட் ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது இந்திய அணிக்கு 8.4 ஓவர்களில் 73 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியை அடைந்தது.  இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 19-வது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்சர் அடிக்க முயற்சித்தார்.பந்து சிக்சர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை அவுட்டாக்கினார். கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே விழ இருந்தார் ஹர்லீன்,உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே குதித்து அடுத்த நொடியே உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ வந்த, பந்தைப் ஒரே நொடியில் பிடித்தது அனைவரையும் வியப்பிலாற்றினார்.இது பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பிடிக்கப்பட்ட மிகச் சிறந்த கேட்சாக  பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. ஹர்லீன் தியோல்யின்  இந்த கேட்சை சச்சின் உட்பட பலரும் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment on "இந்திய வீராங்கனையின் வைரலாகும் வீடியோ- ஹர்லீன் தியோல் ‘பாய்ந்து பிடித்த கேட்ச்’"

Leave a comment