இந்திய பிரிமியர் லீக் 2022 தொடரில் 10 அணிகளுடன் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன.

www.indcricketnews.com-indian-cricket-news-93

ஐபிஎல் 14வது சீசன் அமீரகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த சீசன் முடிந்த உடன் 15ஆவது சீசன்- இல் இருந்து மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படவுள்ளதாக  பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை  சமீபத்தில் வெளியிட்டது. எந்த நகரத்தை மையமாகக்  கொண்டு இந்த இரண்டு அணிகள்  உருவாக்கப்படும் மற்றும் யார் யார் வாங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு புதிய அணிகளை வாங்க விரும்பும் நிறுவனங்கள்  அக்டோபர் 5ஆம் தேதிக்குள் ஐடிடி நுழைவுச்சீட்டை  வாங்க வேண்டும் என்றும், இதை வாங்க 10 லட்ச ரூபாயை டெபாசிட் தொகையாக செலுத்த  வேண்டுமென்று பிசிசிஐ அறிவித்தது. மேலும், இந்த தொகை எந்த காரணம் கொண்டும் திருப்பி தரப்பட மாட்டாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐடிடி நுழைவு சீட்டைப் பெற 22 நிறுவனங்கள் பதிவு செய்தன. துபாயில் நடந்த 6 மணி நேர ஏலத்துக்கு பின் ஐபிஎல் 2022ல் புதிய அணிகள் எவை என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த போது இன்று அந்த அணிகள் எவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவை லக்னோ மற்றும் அகமதாபாத்.

இதையடுத்து 9 நிறுவனங்கள் மட்டுமே நேற்று இறுதியாக நடைபெற்ற 2 புதிய அணிகளுக்கான ஏலத்தில் பங்கேற்றன. அந்த ஏலம் தற்போது முடிவடைந்தது. இதில் ஆர் பி சஞ்சீவ் கோயங்கா குழு 7090 கோடி  ரூபாய் கொடுத்து லக்னோ அணியையும் சிவிசி  கேபிட்டல் 5625 கோடி கொடுத்து அகமதாபாத் அணியையும் ஏலத்தில் எடுத்துள்ளது.

இதையடுத்து 2014-ம் ஆண்டு முதல் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் 56 போட்டிகள் நடந்து வந்த நிலையில் இனி வரும் ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்பதால்  மொத்தம் 74 போட்டிகள் நடைபெறுவது உறுதியாகிவிட்டது. மேலும் அதற்கான விதிமுறைகளும், ஃபார்மெட்டுகளும் அதற்கு ஏற்றாற் போல மாற்றி அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு அணியும் தனது சொந்த மண்ணில் 7 போட்டிகள் வெளி மைதானங்களில் 7 போட்டிகள் என ஒவ்வொரு அணியும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்பு  மொத்தம் 14 போட்டிகள் விளையாட உள்ளன. இம்முறை 2011 ஐபிஎல் தொடரில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே க்ரூப் முறைகளே பின்பற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Be the first to comment on "இந்திய பிரிமியர் லீக் 2022 தொடரில் 10 அணிகளுடன் மொத்தம் 74 போட்டிகள் நடைபெறவுள்ளன."

Leave a comment

Your email address will not be published.