இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்

www.indcricketnews.com-indian-cricket-news-91

மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தை மிதாலி பிடித்திருப்பதன் மூலம், ஆண்கள் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளிலும் அதிக ரன்கள் அடித்த சாதனை இந்தியா அடைந்துள்ளது.கிரிக்கெட்டின் 3 விதமான போட்டிகளிலும் அதிகமான ரன்கள் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ்க்கு உரிமையானது.இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வந்தார்கள்.  இதில்  3-வது மற்றும் கடைசிஒருநாள் ஆட்டத்தின்போது இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.கிரிக்கெட்டின் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சேர்த்து இங்கிலாந்து வீராங்கனை சார்லோட்டி எட்வர்ட்ஸ் 10,273 ரன்கள் சேர்த்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார். அந்த சாதனையை முறியடிக்க மிதாலி ராஜுக்கு 12 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 24-வது ஓவரில் மிதாலி ராஜ் பவுண்டரி அடித்து எட்வார்ட்ஸ் சாதனையை உடைத்தெரிந்தார். இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 220 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணிக்கு நங்கூரமாக இருந்து இறுதி வரை போராடி 75 ரன்கள் திரட்டி வெற்றி பெற வைத்திருக்கிறார் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ்.பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ உலக மகளிர் கிரிக்கெட்டில், 3 விதமானப் போட்டிகளிலும் அதிகமான ரன்களைக் குவித்த வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ்எனஅறிவித்திருக்கிறது.இங்கிலாந்துவீராங்கனை சார்லோட்டி எட்வார்ட்ஸ் சாதனையை மிதாலி முறியடித்துள்ளார்” எனத் தெரிவித்திருக்கிறது.ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை எனும் பெருமையை கடந்த மார்ச் மாதம் மிதாலி பெற்றார். 38 வயதான மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் அதிகமான போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை எனும் பெருமையை தன்வசப்படுத்திருக்கிறார்.அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 10ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய வீராங்கனை, உலகளவில் 2-வது வீராங்கனை மிதாலி ராஜ் என்பது பாராட்டுக்குரியது.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ஜாம்பவனாக திகழும் மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்து எப்போதும் மறக்கமுடியாதளவு சாதனையை படைத்துள்ளார். மிதாலி ராஜின் சாதனையை பாராட்டி கிரிக்கெட் ரசிகர்கள் #MithaliTheGOAT என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அதுபோலத்தான் மிதாலி ராஜும். இவரின் பெயரை தான் கடந்த 22 ஆண்டுகளாக மகளிர் கிரிக்கெட் உச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறது. வாழ்நாளில் இப்படியொரு சாதனையை படைக்க வேண்டுமென்ற தனது ஆசையை. இப்போது நிறைவேற்றிவிட்டார் மிதாலி ராஜ்.

Be the first to comment on "இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்"

Leave a comment

Your email address will not be published.


*