இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனிந்தர் சிங், கே.எல்.ராகுல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

www.indcricketnews.com-indian-cricket-news-10034102

டெல்லி: நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இழந்ததால், பேட்டிங் சூப்பர் ஸ்டார்களான கே.எல்.ராகுல், விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோரின் சேவையை இந்திய அணி மோசமாக இழந்தது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்ட பிறகு, தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக செயல்படவுள்ளார். 30 வயதான ராகுல் இதுவரை இந்தியாவுக்காக 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1665 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்த பின் முக்கிய தொடர்களான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் காயம் காரணமாக பங்கேற்காத கே.எல்.ராகுல் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கம்பேக் கொடுத்தார்.

அதன்பின்னர் டி20 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்ற கே.எல்.ராகுல் எதிரணியை அச்சுறுத்தும் வகையான ஆட்டத்தை  வெளிப்டுத்திவில்லை. அதிலும் குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் 120 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆறு இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்நிலையில் கே.எல்.ராகுல் மீண்டும் வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஏற்பாடு செய்த ஊடக உரையாடலில் ராகுலின் சமீபத்திய ஃபார்ம் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மனிந்தர் சிங் , “இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் மிகச்சிறந்த திறமையான வீரர்.

அவர் எப்படிப்பட்ட கம்பீரமான கிரிக்கெட் வீரர் என்பது நமக்குத் தெரியும். எனவே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அச்சமற்ற அணுகுமுறையைக் கடைப்பிடித்து அதிலிருந்து வெளியே வர வேண்டும்.

குறிப்பாக முதல் சில ஓவர்களில் பந்துகளை தேவையான நேரத்தில் விளையாடாமல் இருப்பது பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்திய அணியின் துணை கேப்டனாகவே இருந்தாலும், வரும் காலங்களில் சரியாக விளையாடவில்லை என்றால் அணியிலிருந்து நீக்கப்படலாம். எனவே எந்தவொரு அச்சமின்றி ஒவ்வொரு போட்டியிலும் விளையாட ராகுல் முன்வர வேண்டும் ” என்று சிங் அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல சுப்மன் கில் குறித்து பேசிய அவர், “ஒருநாள் போட்டிகளில் விளையாடி வரும் இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு டெஸ்ட், ஒருநாள் ,டி20 கிரிக்கெட் என அனைத்து விதமான போட்டிகளிலும் வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சுப்மன் கில் தொடக்க வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரிலும் களமிறக்கப்பட வேண்டும். ஏனெனில் அவரது பேட்டிங்கில் கொஞ்சம் கூட பயம் தெரியவில்லை. எனவே அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் ” இவ்வாறு மனிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.

Be the first to comment on "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனிந்தர் சிங், கே.எல்.ராகுல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்."

Leave a comment

Your email address will not be published.


*