இந்திய அணி வீரர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு:

www.indcricketnews.com-indian-cricket-news-138

இங்கிலாந்து: இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அவர்களை. பிரிசோதித்தது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்றும் மற்றொரு வீரருக்குப் பாதிப்பு இருப்பதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த வீரருக்கு வரும் 18-ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்யப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ தெரிவிக்காமலே இருந்து வந்தது. பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஒரு கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், கடந்த எட்டு நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் அணியினர் தங்கும் விடுதியில் அவர் இல்லை எனவே மற்ற வீரர்கள் யாருக்கும் பாதிப்பு வராது  எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயரைச் தெரிவிக்க முடியாது என்றும் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர், ரிஷப் பந்த் எனத் தற்போது தகவல் கசிந்துள்ளது.  இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி தொடங்கி வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும். இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் தயாராகி வருகின்றனர். எனினும் மற்றொரு நபரின் தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா உறுதியான 2வது நபர் யார் என்பது தெரியவந்தது, அணியின் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் தயாநந்த் காரானிக்கு தான் கொரோனா உறுதியானதாக தகவல் வெளிவந்துள்ளது. அவருக்கும் டெல்டா ப்ளஸ் கொரோனா வகைதான் பரவியுள்ளதாகவும் பேசப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் அணியில் மேலும் 2 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சாஹா ஆகியோருக்கு முதலில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என முடிவுகள் வந்தது, இருப்பினும் அவர்களின் உடல்நிலை வழக்கத்திற்கு மாறாக உள்ளது. எனவே அவர்கள் தீவிர கண்காணிப்புடன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்தில் குடும்பத்தினருடன் ஜாலியாக சுற்றி வந்த இந்திய வீரர்கள் அனைவரும் தற்போது துர்ஹாம் நகரத்தில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அவர்கள் ஜூலை 20ம் தேதி முதல் இங்கிலாந்தின் கவுண்டி அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கவிருக்கின்றனர். இந்த போட்டியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 4 பேரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனக்கூறப்படுகிறது. இருப்பினும் அவர்கள் இல்லாதது ஒரு பின்னடைவாக இருக்குமென பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Be the first to comment on "இந்திய அணி வீரர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு:"

Leave a comment

Your email address will not be published.


*