இந்திய அணியைவிட இந்த ஐபிஎல் அணிதான் பெஸ்ட்: மைக்கேல் வான் கிண்டல்!

Michael Vaughan Tweets Again To Remind India Of Mumbai Indians1
Michael Vaughan Tweets Again To Remind India Of Mumbai Indians1

இந்திய அணியுடன் ஐபிஎல் அணியை ஒப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான் கிண்டல் செய்துள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் இந்திய அணிக்கு புதுமுக வீரர்களாக அறிமுகமானார்கள். இப்போட்டியில், இஷான் கிஷன் துவக்க வீரராகக் களமிறங்கி ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற அதிக வேகப்பந்து வீச்சாளர்களை வெளுத்துக்கட்டி அரை சதம் கடந்து அசத்தினார். சூர்யகுமார் களமிறங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் டாஸ் போடும்போது அணிகள் அறிவிக்கப்பட்டது. அப்போது ட்வீட் வெளியிட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வான், “இந்திய அணியில் நிறைய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். நல்ல முடிவு” எனப் பதிவிட்டார். முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுக்கு 124 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது, மொத்த இங்கிலாந்து எட்டு விக்கெட்டுகளையும், நான்கு ஓவர்களுக்கும் மேலாக மீதமுள்ள நிலையில் எளிதாக மாற்றப்பட்டது.
இஷான் கிஷன் அரை சதம் கடந்த பிறகு மைக்கேல் வான் வெளியிட்ட ட்வீட்டில் “எல்லோருக்கும் ஒன்று கூறிக்கொள்கிறேன். இந்திய அணியைவிட மும்பை இந்தியன்ஸ் பலமான அணி. இஷான் கிஷன் அற்புதமான ஆட்டம்” எனப் பதிவிட்டார்.
இந்திய அணி வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த ட்வீட்டில், “மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்துக்கு எதிராகச் சிறப்பாக விளையாடியது” எனக் குறிப்பிட்டு, இந்திய அணியை கிண்டல் செய்தார்.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்தபோதும் ட்வீட் வெளியிட்ட மைக்கேல் வான், இந்திய அணியைவிட மும்பை இந்தியன்ஸ் சிறந்த அணி எனத் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்த இந்திய அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர், இங்கிலாந்து அணிக்குக் கிடைத்ததுபோல் வேறு எந்த அணிக்கும் நான்கு வெளிநாட்டு வீரர்கள் கிடைத்ததே இல்லை” எனப் பதிவிட்டார்.
எந்த அணியும் மூன்று இன்னிங்ஸ்களில் 150 ஐ கடக்க முடியாததால் இரு அணிகளும் அந்த ஆடுகளத்தில் ரன் அடிக்க சிரமப்பட்டன. இந்தியா 145 ரன்கள் எடுத்து 49 ரன்களைத் துரத்தியதால் இங்கிலாந்து 112 மற்றும் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணிக் கேப்டன் இயான் மோர்கன் (அயர்லாந்து), ஜோப்ரா ஆர்ச்சர் (பார்படாஸ்), பென் ஸ்டோக்ஸ் (நியூசிலாந்து), ஜேசன் ராய் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் இங்கிலாந்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்திய அணியைவிட இந்த ஐபிஎல் அணிதான் பெஸ்ட்: மைக்கேல் வான் கிண்டல்!"

Leave a comment

Your email address will not be published.