இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா, ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தவான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள்
கிரிக்கெட் தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றிய நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு
பின் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்
தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
காயத்தில் இருந்து குணமடைந்த பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஷிகர்
தவானும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியிலும் தவான் இடம் பிடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் டி20 அணியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று
வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, இரண்டு டி20 தொடர்களில் பெஞ்சில்
அமர்ந்து வேடிக்கை பார்த்த அவர், அதே பணியை தொடர இருக்கிறார் என சொல்லாமல் சொல்லி
இருக்கிறது தேர்வுக் குழு.
தீபக் சாஹர் காயம் குணமாக ஏப்ரல் வர ஆகலாம் என்ற நிலையில், அவர் இடத்தை நவ்தீப்
சைனி பிடித்துள்ளார். அதே பில தாக்குர், காயத்தில் இருக்கும் புவனேஸ்வர்
குமாருக்கு மாற்றாக அணியில் தொடர்கிறார்.
இலங்கை டி20 தொடருக்கான இந்திய அணி – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ராகுல்,
ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே,
யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, சைனி, தாக்குர், பாண்டே, சுந்தர்,
சஞ்சு சாம்சன்
ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி – விராட் கோலி (கேப்டன்), ரோஹித்
சர்மா, ஷிகர் தவான், ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட்
கீப்பர்), கேதார் ஜாதவ், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சாஹல்,
பும்ரா, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்
இந்தியா – இலங்கை அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் போட்டிகள் ஜனவரி 5, 7
மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள்
கொண்ட ஒருநாள் தொடரின் போட்டிகள் ஜனவரி 14, 17, மற்றும் 19 தேதிகளில் நடைபெற
உள்ளது.
Be the first to comment on "இந்திய அணியில் மீண்டும் தவான் – ரோகித் சர்மா, ஷமிக்கு ஓய்வு"