இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விலகல்…?

www.indcricketnews.com-indian-cricket-news-045

டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 17ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இத்தொடருடன் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலமும் முடிவடைகிறது.

அதன் பிறகு, அவர் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க மாட்டார் என தகவல்கள் கிடைத்துள்ளன. தான் மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை. டி20 உலகக் கோப்பையுடன் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெற விரும்புகிறேன் என பிசிசிஐ நிர்வாகிகளிடம், ரவி சாஸ்தரி தெரிவித்துவிட்டதாகவும் செய்திகள் தெரியவந்துள்ளன.

இந்திய அணிக்கு பயிற்சியாளராகச் செயல்படுபவர் 60 வயதுவரை மட்டுமே, அப்பதவியில் நீடிக்க முடியும் எனவே தற்போது ரவி சாஸ்திரிக்கு 59 வயதாகிவிட்டதால் அவர் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டாலும் ஒரு வருடம் மட்டுமே பயிற்சியாளராக இருக்க முடியும்.

இதன்காரணமாகத்தான், ரவி சாஸ்திரி இந்த முடிவினை எடுத்திருப்பாக கூறப்படுகிறது. மேலும், புது பயிற்சியாளரை நியமிக்கும் முடிவில்தான் பிசிசிஐ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றது. டி20 உலகக் கோப்பை முடிந்த பிறகு, பயிற்சியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, புது பயிற்சியாளர் தேர்வு செய்யப்படலாம் எனவும் ராகுல் திராவிட் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அவர்தான் புது பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்படுவார் எனவும் கிரிக்கெட் வட்டாரங்களில் அரசல்புரசலாகப் பேசப்படுகிறது.

தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன், பீல்டிங் கோச் ஸ்ரீதர், பௌலிங் கோச் பரத் அருண், பேட்டிங் கோச் விக்ரம் ரத்தோர் ஆகியோரும் விலகவுள்ளதாகத் தகவல் தெரியவருகின்றது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 2014-ஆம் ஆண்டு இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி மேனேஜராக பதவியேற்றார்.

2016-ஆம் ஆண்டுவரை அப்பதவியில் தான் இருந்து வந்தார். அடுத்து அனில் கும்ளே இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட நிலையில், சில கருத்து மோதல் காரணமாக ஒரே ஆண்டில் அப்பதவியிலிருந்து கும்ளே விலகிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ரவி சாஸ்திரிக்கு பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது. இவரது பயிற்சியின்கீழ், இந்திய அணி இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதிவரை முன்னேறிச்சென்றது. அடுத்து, சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா இறுதிப் போட்டிவரை முன்னேறி வந்தது. அவர் தனது முழு முயற்ச்சியும் கொடுத்து தான் இதுவரை சிறப்பாக பயிற்ச்சியளித்து வந்துள்ளார்.

திடீரென விலகுவதால், இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகவும் கவலையான செய்தியாகவே இது அமையும்.

Be the first to comment on "இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விலகல்…?"

Leave a comment

Your email address will not be published.


*