இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டன்சி பதவியிலிருந்து விலகுகிறார்…?

www.indcricketnews.com-indian-cricket-news-063

மும்பை: 2017ஆம் ஆண்டு 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய பிறகு, அவருக்கு பதிலாக  தற்பொழுது வரை தலைமை வகித்து வருகிறார் விராட் கோலி. 32 வயதான இவர் தனது சிறப்பான ஆட்டத்தாலும், முயற்ச்சியினாலும் தலைமை தாங்கி இந்திய அணியை நல்முறையில் வழிநடத்திவந்தார்.

டெஸ்ட் போட்டிகள், 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக வளம் வந்த கோலி தற்போது அதிகப் பணிச்சுமையின் காரணமாக 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் துபாயில் 20 ஓவர் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் இவரின் அறிவிப்பு இரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.  T20 உலகக் கோப்பைத் தவிர மற்ற இரண்டு வடிவ டெஸ்ட்  போட்டிகளிலும் இவரே கேப்டனாக தலைமை வகிப்பார். இது குறித்து அவர் ட்விட்டரில்  கீழ்க்கண்டவாறு ஒரு பெரிய பத்தியில் பதிவு செய்துள்ளார்:

இந்திய அணிக்காக விளையாடியது மட்டுமல்ல அதை வழி நடத்திச் செல்லும் தலைமைப் பொறுப்பை எனக்கு அளித்தது எனது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். நான் கேப்டன்சியில் இருந்தவரையில் எனக்கு உறுதுணையாக இருந்த சக அணி வீரர்கள், நிர்வாகக் குழு, தேர்வுக்குழு, பயிற்ச்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்திய மக்களுக்கும் எது மிகப்பெரிய நன்றி.

இவர்கள் இல்லாமல் என்னால் எதையும் சாதித்திருக்கவே முடியாது. பணிச்சுமை என்பது ஒரு முக்கியமான விவியம் என்பதைப் புரிந்துக்கொண்டேன். கடந்த 8-9 ஆண்டுகளாக 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால் அதிகப் பணிச் சுமை இருப்பதாக உணர்கிறேன். மேலும் கடந்த 5-6 வருடங்களாக கேப்டனாக செயல்பட்டு வருவதால் வேலை நிமிர்த்தம் அதிகமாகவே உள்ளது. எனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாகத் தயாராக எனக்கு  இடம் வேண்டுமென நினைக்கிறேன்.

அதன் காரணமாகவே அக்டோபர் மாத T20 தொடருக்குப் பிறகு பதவியிலிருந்து விலகுவதாக உள்ளேன். கேப்டனாக இருந்தபொழுது எவ்வாறு எனது முழு முயற்ச்சியைக் கொடுத்து சிறப்பாக விளையாடியது போல்  கேப்டன்சியிலிருந்து விலகினாலும் ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணிக்கு எனது பங்களிப்பை வழங்குவேன்.

இவ்வாறு விராட் கோலி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும் விராட் கோலிக்குப் பிறகு கேப்டனாக யார் சமன் செய்யப்போகிறார் என்பது குறித்து நிர்வாகம் எதையும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை எனவே அது ஒரு எதிர்பார்ப்பாகவே தற்ப்பொழுது உள்ளது.

Be the first to comment on "இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கேப்டன்சி பதவியிலிருந்து விலகுகிறார்…?"

Leave a comment

Your email address will not be published.


*