இந்திய அணியின் ஒருநாள் தெடரின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின் 2017 முதல் 2021 வரையிலான ஆண்டுகள் புகழ்பெற்றதாகும்.

www.indcricketnews.com-indian-cricket-news-039

டெல்லி: ஒருநாள் அணி கேப்டன் விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை நியமித்துள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ரோஹித் ஷர்மா தலைமையில் வெற்றி பெற்ற நிலையில், ஏற்கனவே டி20 தொடர் கேப்டனாக செயல்பட்டு வரும் இவர் இனி ஒருநாள் அணி கேப்டனாகவும் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஒருநாள் அணி கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின் பதவிக்காலத்தில், இதுவரை இந்தியா 95 போட்டிகளில் 65 போட்டிகளை வென்றுள்ளது. அதில், விராட் கோலி 21 முறை சதம் அடித்து சராசரியாக 72 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும், கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக மகேந்திரசிங் தோனி அறிவித்ததை தொடர்ந்து, டெஸ்ட் தொடரில் கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்து தொடரிலும் கேப்டனாக பொறுப்பேற்றவுடன் , 2017ல் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

அதேபோல, 2017ல் விராட் கோலி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல களமிறங்கிய இந்திய அணி இறுதிபோட்டி வரை சென்று பாகிஸ்தானிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

மேலும் ,கோலி தலைமையில் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் கலந்து கொண்டு விளையாடிய இந்திய அணி 2017ல்  வங்கதேசத்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கிலும், இலங்கைக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-1 என்ற கணக்கிலும்,  நியூசிலாந்துக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

மேலும், 2018ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 5-1 என்ற கணக்கிலும், வங்க தேசத்துக்கு எதிராக 3-1 என்ற கணக்கிலும், 2018-2019ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்ற கணக்கிலும், 2019ல், நியூசிலாந்துக்கு எதிராக 4-1 என்ற கணக்கிலும், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் மழையின் காரணமாக 5 போட்டிகளில் 2 போட்டிகளில் விளையாடி 2-0 என்ற கணக்கிலும் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

ஆனால், 2018ல் இங்கிலாந்துக்கு எதிரான  டி20 தொடரை வெற்றி பெற்ற நிலையில்,கோலி தலைமையில் ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முதன்முதலில் தோல்வியுற்றது. 2019ல், இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான ஒருநாள் தொடரில் 2 போட்டி டிரா ஆன நிலையில், 3-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

2020 ல், ஆஸ்திரிலேயாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட  ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆனால்,டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் விளையாடி வெற்றி பெற்றது. 2021 தொடக்கத்தில்,கோலி கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டி இந்தியாவில் நடைபெற்றது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்திய அணியின் ஒருநாள் தெடரின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலியின் 2017 முதல் 2021 வரையிலான ஆண்டுகள் புகழ்பெற்றதாகும்."

Leave a comment

Your email address will not be published.


*