இந்திய அணியின் ஆட்டத்தை மதிப்பாய்வு செய்ய ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு பிசிபிஐ நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

www.indcricketnews.com-indian-cricket-news-100313

மும்பை: ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நான்கு வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறிய ஒரே அணியான இந்திய அணி குரூப் 2 பிரிவில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்தது. இதனால் 2022 டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைக்கும் என அனைவரும் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அரையிறுதி போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் படுமோசமாக தோல்வியடைந்தது.

இதனையடுத்து இத்தோல்விக்கான காரணங்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மீது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடமிருந்து பல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதேசமயம் டி20 உலகக்கோப்பையில் இந்தியாவின் ஆட்டத்தை கண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதனால் இந்திய அணி வீரர்களின் செயல்திறன் மதிப்பாய்வு கூட்டத்திற்கு  தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ உயர் அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். 

மேலும் இது குறித்து பேசிய பிசிசிஐயின் உயர் அதிகாரி, “நாங்கள் அரையிறுதியில்  நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளோம். அதனால் அணியில் வெளிப்படையாக சில மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஆனால் கேப்டன் ரோஹித் ஷர்மா , தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோரின் தரப்பைக் கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது. எனவே அவர்களின் கருத்துக்களும் கேட்கப்பட்டு, இந்திய டி20 அணிக்கான எதிர்கால நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இன்சைட் ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வுக் குழுவின் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக் குழுவின் செயல்பாடு குறித்து பிசிசிஐ மகிழ்ச்சியடையவில்லை. எனவே அவர்களின் செயல்பாடும் மதிப்பாய்வு செய்யப்படும். ஆனால் தேர்வுக் குழுவின் தலைவர் ஆய்வுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களின் தேர்வு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் ஆஸ்திரேலியா மைதானத்தில் பவுன்ஸைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சிறப்பான வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியில் இல்லை” எனத் தெரிவித்தார். அடுத்த டி20 உலகக்கோப்பை 2024ல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதால், பிசிசிஐயின் கருத்துப்படி அணியிலுள்ள மூத்தவீரர்கள் படிப்படியாக நீக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் தனிநபர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட முறையில் திறமையானவர்கள். நாங்கள் இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய அணியை பற்றி கவலைப்படுகிறோம். எனவே இங்கிலாந்துக்கு எதிராக நடந்ந நாக் அவுட் ,இனி நடக்க கூடாது. இதை மனதில் வைத்துத்தான் அந்த கூட்டத்தில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” இவ்வாறு பிசிசிஐயின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Be the first to comment on "இந்திய அணியின் ஆட்டத்தை மதிப்பாய்வு செய்ய ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் ஷர்மாவுக்கு பிசிபிஐ நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது."

Leave a comment

Your email address will not be published.


*