இந்தியா VS நியூசிலாந்துக்கு இடையேயான WTC 3-ம் நாள்: இந்தியாவுக்கு புதிய நம்பிக்கை.

www.indcricketnews.com-indian-cricket-news-33

சவுத்தாம்டன்: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சூடுபிடித்துள்ளது.இந்திய அணி சார்பில் ஓப்பனிங் களமிறங்கிய ரோகித் சர்மா – சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்தனர்.இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தது.ரோகித் சர்மா 34 ரன்களுக்கும், சுப்மன் கில் 28 ரன்களுக்கும் அவுட்டாகினர்.நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா 8 ரன்களுக்கு வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி – துணை கேப்டன் ரஹானே ஜோடி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தனர்.இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை கடந்து மேல் சென்றுகொண்டிருக்கிறது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.கோலி44 ரன்களுடனும், ரஹானே 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இந்நிலையில் வலுவான நிலையில் 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிவிராட் கோலி 44 ரன்களுக்கும், துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே 49 ரன்களுக்கு அவுட்டாகினர்.ரிஷப் பண்ட் 4 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.இதன் பின்னர் வந்த ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினார். ஆனால் அவருக்கு மறுமுணையில் சரியான ஜோடி அமையவில்லை. ரவிச்சந்திரன் அஸ்வின் (22), இஷாந்த் சர்மா (4), ஜஸ்பிரித் பும்ரா (0) என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதியில் ஜடேஜாவும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய கெயில் ஜேமிசன் 5 விக்கெட்களை எடுத்தார். ட்ரெண்ட் போல் மற்றும் வாக்னர் தலா 2 விக்கெட்களும், டிம் சவுத்தி ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.அடுத்தடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவுட்டான நிலையில்,வெறும் 71ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 217 | 10 என்ற நிலை ஏற்பட்டது.அடுத்து எதிரணியான நியூசிலாந்த் பேட்டிங்கை தொடங்கியது, இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர்களான, பொம்ரா, சாய்த் சர்மா, மொகமத் சமி இவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் எதிரணியின் 1 விக்கெட்டைக் கூட எடுக்க முடியவில்லை.இதற்கு ஒரு முக்கியமான காரணமும் உண்டு, நியூசிலாந்து அதிகம் டாட் ஷாட்களை மட்டும் அடித்து மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தநிலையில், தமிழக வீரரான ரவிச்சந்திர அஸ்வின் எதிரணியின் தொடக்க ஆட்டநாயகன் லாப்தம்யின்(70) விக்கெட்டை விலாசியடித்தார்.இதனால் அனைவருக்கும் ஒரு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தினார்.அடுத்து வந்தவில்லியம்ஸ் மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் 3 பந்துகளே இருந்ததிலையில் இந்திய அணி இஷான் சர்மா, அரைசதம் அடித்திருந்தகான்வேயின்(54) விக்கட்டை எடுத்தார்.நாள் முடிவில் நியூசிலாந்து 101/2 என்ற நிலையில் உள்ளது.

Be the first to comment on "இந்தியா VS நியூசிலாந்துக்கு இடையேயான WTC 3-ம் நாள்: இந்தியாவுக்கு புதிய நம்பிக்கை."

Leave a comment

Your email address will not be published.


*