இந்தியா Vs இலங்கை:2வது டி20ல் இந்திய அணி தோல்வி!

கொழும்பு:  2-வது டி20 தொடரில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியிடம் தோல்வியை தழுவியது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று இரவு கொழும்புவில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்தார்கள். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து  தவான் (40), ருத்ராஜ் கெயிக்வாட் (21).

முதல் விக்கெட்டிற்கு 49 ரன்கள் சேர்த்தார்கள். இதன் பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களைச் சேர்க்கவில்லை, இதுவே தோல்விக்கு மற்றொரு காரணமானது. தேவத் பட்டிக்கல் 29 ரன்களையும், சஞ்சு சாம்சன் 7 ரன்களுக்கும் பெவிலியன் வெளியேறினார்.

இதனால் இந்திய அணி 16.4 ஓவர்கள் ஆன போதும் 104 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் நின்றது. இதன் பின்னர் வந்த துணை கேப்டன் புவனேஷ்வர் குமார் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் கடைசி சில ஓவர்களில் கூட மிகவும் நிதானமாகவே விளையாடினார்கள்.

12 பந்துகளை சந்தித்த நிதிஷ் ராணா (9) ரன்களை மட்டுமே எடுத்தார். புவனேஷ்வர் குமார் 11 பந்துகளை சந்தித்து (13) ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் பெற்றிருந்தது.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அவிஷிங்கா ஃபெர்னாண்டோ (11) ரன்களிலேயே வெளியேறினார். மறுமுனையில் ஆடிய மற்றொரு ஓப்பனிங் வீரர் மினோத் பனுக்கா (36) ரன்களை சேர்த்தார்.

ஆனால், இதன் பின்னர் வந்த சதீரா சமராவிக்ரமா (8), தசுன் சனக்கா (3) வானிண்டு ஹசரங்கா(15) ஆகியோர் அடுத்தடுத்து மலைபோல சரிந்தனர். இதனால் இலங்கை அணி 105 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு தள்ளப்பட்டது.

ஆனால் தனஞ்ஜெய சில்வா முடிவை மாற்றியமைத்தார். கடைசி 2 ஓவர்களில் அந்த அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனது அதிரடியை காட்டிய தனஞ்செயா (40*) ரன்களைப் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்து வெற்றிக் கனியை சுவைத்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்று தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி.

Be the first to comment on "இந்தியா Vs இலங்கை:2வது டி20ல் இந்திய அணி தோல்வி!"

Leave a comment