இந்தியா Vs இலங்கை: 3வது டி20ல் இந்தியா தோல்வி…

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1 – 1 என்ற கணக்கில் வெற்றியுடன் சமநிலை வகித்தார்கள்.

இந்நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தார்கள். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கமே சரிவாக அமைந்தது.

ருத்ராஜ் கெயிக்வாட் – ஷிகர் தவான் ஜோடி 5 ரன்களுக்குள், கேப்டன் தவான் ஒரு ரன்னை கூட எடுக்காமல் டக் அவுட் ஆக்கப்பட்டு வெளியேறினார். இதன் பின்னர் வந்த வீரர்கள் ஒருவர் கூட அணியின் ஸ்கோரை உயர்த்தவில்லை. அடுத்தடுத்த ஓவர்களில் ஒற்றை இலக்க ரன்களுடன் அவுட் ஆக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள்.

இதில் 3 டக் அவுட்டுகள் அடங்கும். அதிகபட்சமாக ருத்ராஜ் கெயிக்வாட் (19) ரன்களும், குல்தீப் (23) ரன்களும்,புவனேஷ்வர் குமார் (16) ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 81 ரன்களை மட்டுமே இலக்காக வைத்திருந்தது.

நீண்ட நாட்களாக சர்வதேச வாய்ப்புகாக காத்திருந்த சஞ்சு சாம்சனுக்கு இந்த போட்டி கடைசி வாய்ப்பாக இருப்பதாக அமைந்தது. ஏற்கனவே நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளிலும் அவர் பெரிய அளவில் விளையாடவில்லை.82 என்ற குறைவான இலக்கை நோக்கி விளையாடி இலங்கை அணி தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தது.

இந்திய வீரர் ராகுல் சஹார் தன் சிறப்பான பந்துவீச்சால்  தொடக்க வீரர்கள் அவிஷிங்கா (12), மினோத் பானுகா (18) ரன்களுக்கு வெளியேற்றிவிட்டார். இதன் பின்னர் வந்த சதீரா சமரவிக்ரமாவும் (6) ரன்களுக்கு  வெளியேறினார்.ராகுல் சஹாரின் எடுத்த விக்கெட்களால் இந்திய அணிக்கு புதிய நம்பிக்கை கிடைத்தது. ஆனால் அந்த அணியின் தனஞ்செய மற்றும் ஹசரங்கா ஆகியோர்  மிகவும் ஸ்லோ ரன்ரேட்டாக இருந்த இலங்கை அணிக்கு திடீரென அதிரடி காட்ட தொடங்கியது.

இந்த பார்ட்னர்ஷிப் இதனால் 14.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டிப்பிடித்தது இலங்கை அணி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த தனஞ்செயா (23)ரன்களும், ஹசரங்கா (14) ரன்களும் எடுத்தனர் இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் எளிதில் வெற்றியடைந்தது.

Be the first to comment on "இந்தியா Vs இலங்கை: 3வது டி20ல் இந்தியா தோல்வி…"

Leave a comment