இந்தியா Vs இலங்கை.. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

www.indcricketnews.com-indian-cricket-news-146

கொழும்பு: இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா முதலில் பேட்டிங்கை தொடங்கினார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய அசலங்கா (65) ரன்களும், அவிஷிங்கா (50) ரன்களும், கருணரத்னே (44) ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை யுவேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.  276    ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய  அணியில் தொடக்க வீரர்கள் சரியாக ஆடவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய ப்ரித்வி ஷா (13) ரன்களும், ஷிகர் தவான் (29) ரன்களுக்கும் அவுட் ஆக்கப்பட்டனர். இதன் பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் (1) ரன்னும், மணிஷ் பாண்டே (37) ரன்களும் எடுத்து வெளியேற்றப்பட்டனர். இந்த இக்கட்டான நிலையில், நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் மிகவும் சிறப்பாக விளையாடி சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் அரைசதத்தை அடித்தார், 44 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரிகளுடன் (53) ரன்களை விளாசி வெளியேறினார். யாதவின் விக்கெட்டிற்கு பின்னர், இந்திய அணி தோல்வியைத் தழுவும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த எண்ணத்தை மாற்றி அமைத்தார் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர்.  தீபக் சாஹர் இலங்கை பந்துவீச்சில் சிறப்பாக விளையாடிய அவர் 82 பந்துகளில் (69) ரன்களை விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில், தான் விளையாடிய முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார். அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்த புவனேஷ்வர் குமார் (19) ரன்கள் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி  7 விக்கெட்களை இழந்து எதிரணியின் இலக்கை எட்டியது . மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றது.

இந்த போட்டியை இந்திய அணி வென்றதால்,  ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே அணிக்கு எதிராக அதிக போட்டிகளை வென்ற அணியாக இந்தியா இடம்பிடித்துள்ளது. இலங்கை அணிக்கு எதிராக இந்தியா இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "இந்தியா Vs இலங்கை.. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!"

Leave a comment