இந்தியா Vs இலங்கை: உச்சக்கட்ட தன்னம்பிக்கையுடன் இந்திய வீரர் தனது ஃபார்ம் குறித்து எதிரணிக்கு சவால்.

www.indcricketnews.com-indian-cricket-news-111

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய ஏ அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், இந்திய 20 வீரர்கள் கொண்ட ‘ஏ’ அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ ஆணையம்.ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி ஆரம்பமாகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என தெரிவித்துள்ளனர். இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த தொடருக்காக 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இலங்கையின் முன்னாள் கேப்டனும், அந்த அணிக்கு உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்தவருமான அர்ஜுனா ரணதுங்கா கூறுகையில், ”இரண்டாம் தர இந்திய அணி, இங்கு வருவது எங்கள் கிரிக்கெட்டை ஏலனப்படுத்துவதாகும். வருமான தேவைகள் காரணமாக இந்திய பி அணியுடன் விளையாட ஒப்புக்கொண்டதற்கு தற்போதைய இலங்கை நிர்வாகம் தான் காரணமாகும். இந்தியா தங்கள் சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான அணியை இங்கு விளையாட அனுப்பி விட்டார்கள். இதற்கு எங்கள் வாரியத்தை தான் குறை கூற முடியும்’ என்று சமீபத்தில் அவர் குற்றம் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலளித்த இலங்கை கிரிக்கெட் வாரியம், வலிமையான இந்திய அணி தான் இலங்கைக்கு வந்துள்ளதாகவும். அந்த அணியின் பல வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் தான் என்றும் பெதறிவித்தனர். இந்த விவகாரம் குறித்து பல வெளிநாட்டு வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இந்நிலையில், இந்திய அணியின் யுவேந்திர சாஹல் அளித்துள்ள பேட்டியில், ‘நான் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளேன், ஆனால் இத்தொடருக்கு முன்பாக நாங்கள் இரு பயிற்சி போட்டிகளில் விளையாடிணோம், தினம் காலை நேரத்தில் கடும் பயிற்சி மேற்கொண்டுவருகிறோம். இதனால், இங்குள்ள வெயிலுக்கு ஏற்ப எங்களை தயார் செய்துகொண்டோம். எனக்கென்று இரண்டு பவுலிங் பாணி இருக்கிறது. இந்த தொடரில் நீங்கள் அதிக நம்பிக்கையுள்ள வேற விதமான சாஹலை பார்க்கப் போகிறீர்கள்,நான் எனது பந்துவீச்சு ஆங்கிளில் கவனம் செலுத்துகிறேன். அந்த இரண்டு ட்ரிக் பந்துவீச்சில் எந்த பந்தை அதிகம் வீச வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகிறேன்’ என்று அவர் கூறியிருந்தார். இது இலங்கை வீரர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.

Be the first to comment on "இந்தியா Vs இலங்கை: உச்சக்கட்ட தன்னம்பிக்கையுடன் இந்திய வீரர் தனது ஃபார்ம் குறித்து எதிரணிக்கு சவால்."

Leave a comment

Your email address will not be published.


*