இந்தியா VS இங்கிலாந்து: 4வது டெஸ்ட் 1வது நாள் நிலவரம்…

www.indcricketnews.com-indian-cricket-news-013

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துக்கொண்டிருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பவுலிங்கை தேர்வு செய்ய, பனிமூட்டம் மிகுந்த வானிலையில் இந்திய அணி பேட்டிங்கை துவங்கியது. 

தொடக்கத்தில் இருந்து வரிசையாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது இந்திய அணி. முதலில் ரோஹித் ஷர்மா, க்றிஸ் வோக்ஸின் பவுன்ஸ் பந்தில் எட்ஜ் ஆகி (11) ரன்களில் அவுட் ஆனார். பிறகு, (44)பந்துகளை சந்தித்த லோகேஷ் ராகுல், 3 பவுண்டரிகளுடன் (17) ரன்கள் அடித்திருந்த நிலையில் ராபின்சன் ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி அவுட் ஆனார். 

பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து (4) ரன்கள் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். முதன் முறையாக 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, (10) ரன்களில் வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி (50) ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் அவிட் ஆனார். பிறகு துணை கேப்டன் (14) ரன்களிலும், ரிஷப் பண்ட் (9) ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பிறகு வந்த, 36 பந்துகளை சந்தித்த ஷர்துல் (57) ரன்கள் எடுத்தார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் உள்ளது. 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் – உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தார்கள்.  இங்கிலாந்து தரப்பில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓலே ராபின்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 31 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம், ஒரு புதிய சாதனையையும் ஷர்துல் படைத்துள்ளார்.

அதாவது, டெஸ்ட் போட்டிகளில், அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் எனும் பெருமையை ஷர்துல் அடைந்துள்ளார்.  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து தற்போது விளையாடுகிறது.

இதில், பும்ராவின் ஓரே ஓவரில் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஹஸீப் ஹமீத் வெளியேற்றப்பட்டனர். பர்ன்ஸ் 5 ரன்களில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாக, ஹஸீப் எட்ஜ் ஆகி ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதன் பிறகு, 3வது விக்கெட்டுக்கு ஜோ ரூட், டேவிட் மலன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், இந்த தொடரில் மூன்று சதங்கள் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், உமேஷ் யாதவ் ஓவரில் போல்டாகி ( 21) ரன்களில் அவுட் ஆனார்.  இதன் பிறகு,  கிரெய்க் ஒவர்டன் களமிறங்க, இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்துள்ளது.

Be the first to comment on "இந்தியா VS இங்கிலாந்து: 4வது டெஸ்ட் 1வது நாள் நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*