இந்தியா Vs இங்கிலாந்து: 4வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி..

www.indcricketnews.com-indian-cricket-news-021

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்து விளையாடியது ஆரம்பித்தது. இதில் முதல் இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் சிறப்பான கம்பேக் கொடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தழுவியது. ஆட்டத்தின் முதல் நாளன்றே தடுமாறிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி மற்றும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாகினார்கள்.

இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து அணி. டாப் ஆர்டர் வேகமாக சரிந்ததால் 67 ரன்களுக்குள் 5 விக்கெட்கள் சரிந்து விழுந்தது. இதன் பின்னர் வந்த ஒல்லி போப், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அரைசதம் விளாசி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உச்சிக்கு கொண்டு சென்றார். இதனால் அந்த அணி 291 ரன்கள் அடித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 101 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.101 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 127 ரன்களும், கே.எல்.ராகுல் 46 ரன்களும் விளாசினார். பின்னர் புஜாரா 61 ரன்கள், கோலி 41, பண்ட் 50, ஷர்துல் தாக்கூர் 60 ரன்கள் விளாச 466 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்காக இந்தியா வைத்தது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. ரோரி பேர்ன்ஸ்(50) – ஹசீப் ஹமீத் (63) ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்களை அடித்தார். ஆனால் பின்னர் வந்த எந்த வீரரும் நிலைத்து நிற்க முடியவில்லை. டேவிட் மாலன் 5 ரன்களுக்கும், ஒல்லி போப் 2 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். மிடில் ஆர்டரில் பலமாக இருந்த பேர்ஸ்டோ, மொயின் அலி இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர். கடைசியாக அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த கேப்டன் ஜோ ரூட் 36 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். இறுதியில் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல் ஆக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது.  இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களும், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 – 1 என முன்னிலை வகித்து வெற்றிவாகை சூடியுள்ளது.

Be the first to comment on "இந்தியா Vs இங்கிலாந்து: 4வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி.."

Leave a comment

Your email address will not be published.


*