இந்தியா Vs இங்கிலாந்து: 3வது டெஸ்ட் 2-ம் நாள் ஆட்ட நிலவரம்…

www.indcricketnews.com-indian-cricket-news-100

ஹெட்டிங்லி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 3வது டெஸ்ட் போட்டி 2வது நாளில்  இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீத் ஆகியோர் சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். இதனால் முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 135 ரன்களை குவித்தார்கள். பேர்ன்ஸ் (61) ரன்களை எடுத்து ஷமியின் வேகத்தில் அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான ஹசீப் ஹமீத்தை (68) ரன்களுக்கு பெவிலியனுக்கு அனுப்பினார் ரவீந்திர ஜடேஜா. இந்த டெஸ்ட் தொடரில் 41 விக்கெட்களை வேகப்பந்துவீச்சாளர்களே தொடர்ந்து எடுத்த நிலையில் 42 வது விக்கெட்டை இறுதியாக சுழற்பந்துவீச்சாளர் பெற்றார் . டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முதல் முறையாகும். இனி இந்திய அணி கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்தது.

அனுபவ வீரர் டேவிட் மாலனுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட் இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உச்சியில் நிறுத்தினார். சிறப்பாக விளையாடிய அவர், இந்த போட்டியிலும் சதம் அடித்தார். இந்த தொடரில் ஜோ ரூட் அடிக்கும் 3வது சதமாகும். இதே போல இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கும் 8வது சதமாகும். நீண்ட நேரமாக நிலைத்திருந்த இந்த பார்ட்னர்ஷிப்பை இளம் வீரர் முகமது சிராஜ் அவுட் ஆக்கினார்.

அவர் வீசிய பந்தில் அவசரப்பட்டு ஆட முயன்ற டேவிட் மாலன் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து (70) ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். மறுமுணையில் இருந்த ஜோ ரூட் (121) ரன்களுக்கு பும்ராவின் வேகத்தில் போல்ட் அவுட் ஆனார். இங்கிலாந்தின் டாப் ஆர்டரை காலி செய்த இந்திய அணி மிடில் ஆர்டர் விக்கெட்களை அடுத்தடுத்து மலைபோல் சரித்தது. ஜானி பேர்ஸ்டோ (29) ரன்கள், ஜாஸ் பட்லர் (7) ரன்கள், மொயின் அலி (8) ரன்கள், சாம் கரண் (15), என அனைவரும் வந்த வேகத்தில்

வெளியேற்றப்பட்டனர். இதனால் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 423 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஓவர்டன் மற்றும் ராபின்சன் ஆகியோர் களத்தில் உள்ளார்கள். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இமாலயன் ஸ்கோரை இந்தியாவின் முன் நிறுத்தியுள்ளது இங்கிலாந்து. இதனைக் கடந்து இந்திய அணி வருமா என்பது அனைவருக்கும் கவலையாகவே இருந்தானும் ஒரு கம்பேக் இந்திய அணி கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment on "இந்தியா Vs இங்கிலாந்து: 3வது டெஸ்ட் 2-ம் நாள் ஆட்ட நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*