இந்தியா VS இங்கிலாந்து : 2-ம் நாள் ஆட்ட நிலவரம்…

www.indcricketnews.com-indian-cricket-news-21

நாட்டிங்கம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு. (ஆக.5) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணி மிகச் சிறப்பாக தனது முதல் இன்னிங்ஸை ஆட ஆரம்பித்தது.

தொடக்க வீரர்களான ரோஹித் – ராகுல் கூட்டணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர்.  இடையில் 2 ரிவ்யூக்கள் இங்கிலாந்து எடுத்தாலும், அதனால் பலனில்லை. இதனால் ரோஹித் – ராகுல் ஜோடி (50) ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து வெற்றிகரமாக பயணித்தார்கள். 

இதனால், ஸ்கோரர் மெல்ல அதிகரித்தது. மதிய உணவுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், ஓலே ராபின்சன் வீசிய புல் ஷாட்டில் தூக்கி அடித்த ரோஹித், (36) ரன்களில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி (97) ரன்களைக் கொண்டிருந்தது.

இன்னும் மூன்று ரன்கள் எடுத்திருந்தால் இந்த பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்திருக்கலாம். ஆனால், உணவு இடைவேளைக்கு பிறகு  ஒன் டவுன் இறங்கிய புஜாரா (4) ரன்களிலும், கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலும் அடுத்தடுத்து வெளியேற்றினார் ஆண்டர்சன்.  ராபின்சன் ஓவரில், லோகேஷ் ராகுல் மற்றும் ரஹானே விளையாடிக்கொண்டிருந்த நிலையில் ராஹானே அவுட் ஆக்கப்பட்டார்.

இந்தியா 4வது விக்கெட்டை இழந்துவிட்டது. இதன் பிறகு அடுத்த விக்கெட்டையும் இந்தியா இழந்திருக்க வேண்டிய நிலையில். ஆண்டர்சன் ஓவரில் 52 ரன்கள் எடுத்திருந்த லோகேஷ் ராகுல் ஸ்லிப்பில் கொடுத்த  கேட்சை டாம் சிப்லே பிடிக்க தவறினார். அதை மட்டும் பிடித்திருந்தால், 5வது விக்கெட்டும் கிடைத்திருக்கும். இப்போது இந்திய அணி மிடில் ஆர்டரை முற்றிலும் இழந்து நிர்க்கிறது. இந்நிலையில், 46வது ஓவர் வீசப்பட்ட போது, ஆட்டம் மழையால் பாதித்தது.

நீண்ட நேரம் மழை பெய்ததால், ஆட்டம் மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகம் இருந்தது எனினும், கிட்டத்தட்ட 2 மணி நேரம் கழித்து மழை நின்று, மீண்டும் ஆட்டம் துவங்கப்பட்டது. 2 பந்துகளே வீசப்பட்ட நிலையில், மீண்டும் போட்டி மழையால் நின்றது. இதைத் தொடர்ந்து மழை விடாமல் பெய்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.

இந்திய அணி 46.4வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். லோகேஷ் ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Be the first to comment on "இந்தியா VS இங்கிலாந்து : 2-ம் நாள் ஆட்ட நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*