இந்தியா VS இங்கிலாந்து: 2வது டி20 5ம் நாள் இந்திய அணி சாதனை வெற்றி…

www.indcricketnews.com-indian-cricket-news-059

லார்ட்ஸ்: லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரிஷப் பண்ட் (22) ரன்களிலும், இஷாந்த் ஷர்மா (16) ரன்களிலும் வெளியேற்றப்பட்டனர்.

கைவசம் இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்த நிலையில்   பின்னர் களமிறங்கிய ஜஸ்பிரித் பும்ரா – முகமது ஷமி யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 9வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி- பும்ரா ஆகியோரை இங்கிலாந்து பெளலர்கள் எளிதில் வெளியேற்றலாம் என எண்ணினார்கள்.

ஆனால் முன்னணி பேட்ஸ்மேன்களே இங்கிலாந்து பவுலிங்கை எதிர்கொள்ள திணறிய சூழலில் முகமது ஷமி பவுண்டரி, சிக்ஸர் என அடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய பும்ராவும் எதிரணி பவுலர்களை தனது தடுப்பாட்டத்தால் அசரவைத்தார். இதனால் இந்த ஜோடி 9வது விக்கெட்டிற்கு (77) ரன்களை குவித்தது.

9வது விக்கெட்டிற்கு இந்தியாவின் அதிகபட்ச ரன்கள் இதுவே , பின்னர் இந்திய அணி 298 ரன்கள் எடுத்திருந்த போது கோலி டிக்ளர் செய்து விட்டார். இதனால் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்கள் இலக்காக அமைந்தது. கடைசி வரை களத்தில் இருந்த ஷமி (56) ரன்களுடனும், பும்ரா (34) ரன்களுடனும் நாட் அவுட்டாகாமல் வெளிவந்தனர்.

இதனால் இலக்கைத் துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு போதிய கால நேரம் இல்லை. கடைசி நாளில் மீதம் 2 செஷன்கள் மட்டுமே இருந்ததால் அதற்குள்ளாக 272 ரன்கள் அடிக்கவேண்டிய சூழலில் இருந்தனர். இதனால் அதிரடியாக ஆட முயன்ற அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பேர்ன்ஸ், டாம்னிக் சிப்லே இருவருமே டக் அவுட்டானார்கள். இதன் பின்னர் வந்த ஹமீத் (9) ரன்களுக்கும் பேர்ஸ்டோ (2) ரன்களுக்கும் வெளியேறினர்.

இதனால் அந்த அணி 67/4 என்ற நிலையில் இருந்தது. முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் (33) ரன்களில் வெளியேறினார். ரூட்டின் விக்கெட்டிற்கு பிறகு சீட்டுக்கட்டை போல மலமலவென விக்கெட்கள் விழுந்தன. ஜோஸ் பட்லர் மட்டுமே சிறிது நேரம் தாக்குப்பிடித்து நின்ற சூழலில் சிராஜ் அவரை வெளியேற்றினார்.

இறுதியில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட் செய்யப்பட்டது. இதனால் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Be the first to comment on "இந்தியா VS இங்கிலாந்து: 2வது டி20 5ம் நாள் இந்திய அணி சாதனை வெற்றி…"

Leave a comment

Your email address will not be published.


*