இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: வெற்றி யாருக்கு என கவாஸ்கர் கணிப்பு…

www.indcricketnews.com-indian-cricket-news-013

லண்டன்:டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாவுள்ளது.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார்கள் ஆனால், அதில் தோல்வியடைந்தார்கள்.

இந்த போட்டிக்கு பின்னர் சுமார் 6 வாரங்கள் இடைவெளி கிடைத்ததால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்,எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அந்நாட்டின் கவுண்டி அணிகளுடன் விளையாடியது. பயிற்சி போட்டிகளில் வீரர்கள் தீவிரமாக இருந்ததால், தொடரை எளிதாக கைப்பற்றிவிடும் என நினைத்தார்கள். ஆனால்  சுப்மன் கில்லுக்கு ஏற்கனவே இருந்த உள்காயத்தினால் அவர் வெளியேறிவிட்டார்.

வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோரும் காயமடைந்ததால் வெளியேறினார்கள். இதே போல சமீபத்தில் மயங்க் அகர்வாலும் தலையில் ஏற்பட்ட காயத்தினால் அவரும் வெளியேற்றப்பட்டார். இவர்களுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் வரவழைக்கப்பட்டார்கள்.தொடர்ந்து அணியில் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டதால், இந்த டெஸ்ட் தொடரை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உருவானது.

இந்நிலையில் இதுகுறித்து சுனில் கவாஸ்கர் தனது கணிப்பை தெரிவித்துள்ளார். தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், இந்த முறையும் எனது கணிப்பு வானிலையை பொறுத்து தான் அமையும். நான் 10 நாட்களுக்கு முன்னர் தான் இங்கிலாந்தில் இருந்து திரும்பினேன், அப்போது வானிலை நன்றாக இருந்தது. பல சமயங்களில் நன்கு வெயில் அடிக்கும் சிறிதளவு தான் மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருந்தது.

எனவே 5 டெஸ்ட் போட்டிகளின் 25 நாட்களில் 22 நாட்கள் வெயில் அடித்தால் கூட இந்திய அணி 4 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.நான் கணித்திருப்பது சரியாக இருக்குமென நினைக்கின்றேன். அவற்றையெல்லாம் மீறி விராட் கோலியின் ஃபார்ம் மிக முக்கியம். கடந்த 2018ம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் வைத்திருந்த ஃபார்ம் மற்றும் ஷாட் தேர்வுகள் அற்புதமாக அமைந்தது.

இங்கிலாந்தின் மெயின் பவுலர் ஆண்டர்சனுக்கு தற்போது வயதாகி விட்டதால் ஆனால் கோலிக்கு அனுபவம் கூடியுள்ளது  எனவே விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக ஆட வேண்டும், என கவாஸ்கர் இந்திய அணிக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் இந்திய அணி வெற்றிபெற  நிறைய வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Be the first to comment on "இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: வெற்றி யாருக்கு என கவாஸ்கர் கணிப்பு…"

Leave a comment

Your email address will not be published.


*