இந்தியா VS இங்கிலாந்து: டி20 விறுவிறுப்பான 4ம் நாள் ஆட்ட நிலவரம்…

www.indcricketnews.com-indian-cricket-news-052

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இந்தியா – இங்கிலாந்து அணிகள் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் அடித்ததன் மூலம், இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலையில் உள்ளது இங்கிலாந்து.

இந்த நிலையில் தான் 4-ம் நாளான நேற்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. மோசமான வானிலை மற்றும் நேரக்குறைவு காரணமாக 2வது இன்னிங்ஸில் விரைவாக 3000 ரன்கள் அடித்து, 270 – 320 ரன்கள் என்ற டார்கெட்டை இங்கிலாந்துக்கு நிர்ணயிக்க முடிவெடுத்தது இந்தியா.

ஆனால் அந்த ப்ளான்  தோல்வியைத் தழுவியது. இந்திய அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் ஷர்மா அடுத்தடுத்து இங்கிலாந்து பவுலர் மார்க்வுட்யின் வேகத்தில் தங்களது விக்கெட்டை இழந்தனர். ராகுல் (5) ரன்களிலும், ரோகித் (21) ரன்களிலும் விக்கெட்டை கொடுத்தனர். இரு தொடக்க வீரர்களையும் இந்திய அணி 30 ரன்களுக்குள் இழந்துவிட்டதால், கோலியின் ப்ளானில் திடீர் மாற்றம் ஏற்பட்டது.

அதன்படி மிடில் ஆர்டரை கொண்டு ரன்களை உயர்த்த வேண்டும் என்பதால், நிதானமாக ரன்களை குவித்து, பந்துவீச்சில் திறமையை காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். இதன் பின்னர் வந்த கேப்டன் கோலி நிதானமாக ஆடிய போதும் சாம் கரணின் மேஜிக்கால் (20) ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார்.

இந்தியாவின் மிடில் ஆர்டரில் இருக்கும் புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையே இல்லாமல் இருந்த நிலையில்   கம்பேக் கொடுத்தனர் புஜாரா – ரகானே ஜோடி. மிகவும் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 4வது விக்கெட்டிற்கு (100) ரன்களை சேர்த்தனர். ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி விளையாடவில்லை. அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றினர்கள். சிறப்பாக விளையாடிய அஜிங்கியா ரகானே (61) ரன்கள் எடுத்தார். 206 பந்துகளை எதிர்கொண்ட சட்டீஸ்வர் புஜாரா (45) ரன்களை அடித்தார். இதன் பின்னர் வந்த ஜடேஜா, வழக்கம் போல ஒரு 40 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரோ மூன்றே ரன்களில் மொயின் அலியிடம் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் நிதானமாக ரன்களை சேர்த்து வந்த சூழலில் வெளிச்சமின்மை காரணமாக 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இதில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு (181) ரன்கள் சேர்த்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் வேகமாக ரன்களை குவிக்க முற்பட்டால் மட்டுமே வெற்றிவாய்ப்பை இந்தியா  பெற இயலும்.

Be the first to comment on "இந்தியா VS இங்கிலாந்து: டி20 விறுவிறுப்பான 4ம் நாள் ஆட்ட நிலவரம்…"

Leave a comment

Your email address will not be published.


*