இந்தியா VS இங்கிலாந்து: என்ட்ரி கொடுக்கும் அஷ்வின்…

www.indcricketnews.com-indian-cricket-news-001

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது.  நாட்டிங்கமில்

நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாள் கொட்டித் தீர்த்த மழை காரணமாக அந்த நல்வாய்ப்பை இழந்து விட்டது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில்,  விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது. இங்கிலாந்தை 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிப் பெற்றார்கள்.

இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து அணி. அதன் பிறகு  76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை  (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து நடந்த அணி மீட்டிங்கில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. லண்டன் ஓவல் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருப்பதால்.இந்திய அணியில் 2 ஸ்பின்னர்கள் இடம்பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், ஜடேஜாவுக்கு கடந்த போட்டியில் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை என்பதால்  முதன் முறையாக அஷ்வின் இத்தொடரில் இடம் பெறுவார் என்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவெனில், ஜடேஜாவுக்கு பதிலாக அவர் இடம் பெறவில்லை என்பதுதான்  இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் தான் அஷ்வின் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறுகிறார்கள். அதாவது, 3 ஃபாஸ்ட் + 2 ஸ்பின் என்று 3+2 ஃபார்முலாவில் இந்தியா களமிறங்கலாம் என்று கூறுகிறார்கள்.

 எனினும், ஒருவேளை ஜடேஜா குணமாகவில்லை எனில், இஷாந்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வாய்ப்புண்டு அதாவது 4 ஃபாஸ்ட் + 1 ஸ்பின் என்று இந்தியா களமிறங்கலாம்  இதுகுறித்த தகவல், அஷ்வினுக்கும், இஷாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணி மீட்டிங்கில் சில முக்கிய சீனியர் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர் அதில், இஷாந்தும் ஒருவராம் சீனியர் வீரரான இஷாந்த், இங்கிலாந்து ஆடுகளங்களில் இதற்கு முன் மிகச் சிறப்பாக பந்துவீசியராவார்  இன்னும் சொல்லப்போனால், இங்கிலாந்தில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின், மற்ற பவுலர்களை காட்டிலும் அதிகம் என்பது தான் உண்மை ஆனால், இந்த சீசனில் அவரது பவுலிங் சரியில்லை என்பதே பிரச்சனையாக உள்ளது. இந்த சூழலில், அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகியாக தற்போது உள்ளது.

Be the first to comment on "இந்தியா VS இங்கிலாந்து: என்ட்ரி கொடுக்கும் அஷ்வின்…"

Leave a comment