இந்தியா vs இங்கிலாந்து: இந்திய அணி மூன்றாவது டெஸ்டிற்கான பயிற்ச்சியை துவங்கியுள்ளது…

www.indcricketnews.com-indian-cricket-news-077

லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியைத் தொடங்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை  ஹெடிங்லி மைதானத்திற்கு வந்தடைந்தார்கள். இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் வரும் புதன்கிழமை தொடங்கவுள்ளது.

முதல் டெஸ்ட் டிராவிலும்   இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வெற்றியும் பெற்றது. இந்திலையில் இந்திய அணி முன்னதாகவே லீட்ஸ்க்கு வந்து தங்களது கடினமான பயிற்ச்சியை தொடங்கியது. இது குறித்து பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது.

“ஹலோ மற்றும் ஹெட்லிங்லே ஸ்டேடியத்திற்கு உங்களை வரவேற்கிறோம், லீட்ஸ், இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டிக்கான எங்கள் இடம்” என்று பிசிசிஐ ட்வீட்டில் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், மூன்றாவது டெஸ்டுக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளனர்.

ஹெடிங்லியில் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வீரர்கள்: 1.ஜோ ரூட் (கேப்டன்), 2.மொயீன் அலி, 3.ஜேம்ஸ் ஆண்டர்சன், 4.ஜானி பெர்ஸ்டோவ், 5.ரோரி பர்ன்ஸ், 6. ஜோஸ் பட்லர் (wkt), 7.சாம் கர்ரன், 8.ஹசீப் ஹமீட், 9.டான் லாரன்ஸ், 10.சாகிப் மஹ்மூத், 11.டேவிட் மலன், 12.கிரேக் ஓவர்டன், 13. ஒல்லி போப், 14.ஒல்லி ராபின்சன், 15.மார்க் வூட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்திய அணியிடமிருந்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை. எனவே எந்த 15 வீரர்கள் பட்டியலில் இடம்பெறுவார்கள் என ஊகிக்கமுடிகிறது.

அந்தவகையில் இரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடிய வீரர்கள்  அணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியாக விளையாடத வீரர்களுக்கு மாற்று வீரர்களைக்கூட தேர்ந்தெடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்திய அணியின் உத்தேச வீரர்களின் பட்டியல்: 1.ரோஹித் ஷர்மா, 2.கே.எல்.ராகுல், 3.சேத்தேஸ்வர் புஜாரா, 4.விராட் கோலி (கேப்டன்), 5.அஜிங்கிய ரஹானே, 6. ரிஷப் பந்த், 7. ரவிச்சந்திரன் அஸ்வின், 8. ரவீந்திர ஜடேஜா,  9.இஷாந்த் ஷர்மா, 10.ஷர்தூல் தாகூர், 11. முகமது ஷமி, 12.ஜஸ்பரீத் பும்ரா, 13.முகமது சிராஜ்.

இவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் தொடரில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, அஸ்வின் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் என்பதால் பார்ட் டைம் பௌலராக செயல்படும் நிலை இருந்தாலும்கூட பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி, விக்கெட்களை வீழ்த்த கூடியவர் ஆவார்.

மேலும், பேட்டிங்களிலும் ஓரளவுக்குச் சிறப்பாக சோபிக்க கூடிய வரும் தான கடந்த முறை இங்கிலாந்து அணி இந்திய சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, அஸ்வின் சதம் அடித்திருத்தார். எனவே அஸ்வின் மூன்றாவது டெஸ்டில் களமிறக்கப்படுவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Be the first to comment on "இந்தியா vs இங்கிலாந்து: இந்திய அணி மூன்றாவது டெஸ்டிற்கான பயிற்ச்சியை துவங்கியுள்ளது…"

Leave a comment

Your email address will not be published.


*